திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம்
28 Feb 2026, 2:29 pm
<p><strong>திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம்</strong></p>
<p>கோவை, பிப்.28- கோவையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. சாலைகளில் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து வெள்ள மாக ஓடியதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனினும், இரவு நேரங்களில் அவ் வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், வெள்ளி யன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் மேகமூட்டத்துடன் கூடிய கனமழை கொட்டியது. குறிப்பாக, தடாகம் சாலை, இடையார்பாளையம், வேலாண்டிபாளை யம், வெங்கடாபுரம், சாய்பாபா காலனி, கவுண் டம்பாளையம், வடவள்ளி, கே.என்.ஜி. புதூர் மற்றும் கஸ்தூரி நாயக்கன்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத் திற்கும் மேலாக கனமழை நீடித்தது. இந்த திடீர் மழையினால் சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், பல இடங்களில் சாக்கடை நீரும் கலந்து ஆறாகப் பெருக் கெடுத்தது. மழைநீர் தேங்கியதன் காரண மாக தடாகம் சாலை உள்ளிட்ட முக்கிய வழித் தடங்களில் கடுமையான போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. இருந்தபோதும், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பத்திற்கு பிறகு பெய்த இந்த மழை, கோவை மக்களி டையே சற்று ஆறுதலையும், மகிழ்ச்சியை யும் ஏற்படுத்தியுள்ளது.</p>
