தி.மலை ரூ. 700 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சாலைப் பணிகள்
11 Dec 2025, 5:47 pm
<p><strong>தி.மலை ரூ. 700 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சாலைப் பணிகள்</strong></p>
<p>திருவண்ணாமலை, டிச.11 – திருவண்ணாமலை மாநகராட்சிப் பகுதியில் புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை - அவலூர்பேட்டை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலை யாக அகலப்படுத்தும் பணியினை அமைச்சர் எ.வ. வேலு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்பட்டு வருவதாகவும், தற்போது அவலூர்பேட்டை சாலையில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 64 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவத்தார். மேலும், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 770 கோடி மதிப்பில் 84 கி.மீ. நீளத்திற்குப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதி யாண்டில் ரூ. 240 கோடி மதிப்பில் 37 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழிச் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் பயண நேரம் குறைந்து, விபத்துக்கள் குறைவதோடு வணிகம், தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சி பெறும் என்றும் அமைச்சர் எ.வ. வேலு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் மற்றும் மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
