சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
17 Jun 2026, 10:12 pm
<p><strong>சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>உடுமலை, ஜூன் 17- உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக் குளம் உட்கோட்ட சாலைப் பணியாளர்களின் பதவி உயர்வு உரிமையைப் பறிக்கும் வகை யில், தாராபுரம் கோட்டப் பொறியாளர் வெளி யிட்ட முதுநிலைப் பட்டியலை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர், உடு மலை உட்கோட்ட அலுவலகம் முன்பு புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அனைத்து சாலைப் பணியாளர்க ளும் பயன்பெறத்தக்க 2017-ஆம் ஆண்டு முது நிலைப் பட்டியலை நிலைநிறுத்த, நீதிமன்ற மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனு உள் ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற் கொள்ள தவறிய கோட்டப் பொறியாளரின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். உட்கோட்ட தலைவர் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், கோட்டச் செயலாளர் செல்லமுத்து, தலை வர் வெங்கிடுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில பொதுச்செயலா ளர் அம்சராஜ் நிறைவுரையாற்ற, கோட்டப் பொருளாளர் கருப்புசாமி நன்றி கூறினார்.</p>
