சாலைப் பணியாளர்கள் பறை இசை முழங்கி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>சாலைப் பணியாளர்கள் பறை இசை முழங்கி கோரிக்கை ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், ஜன. 27 – தமிழ்நாடு நெடுஞ்சா லைத் துறை சாலைப் பணி யாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை நீதி மன்ற உத்தரவுப்படி பணிக் காலமாக அறிவித்து ஆணை பிறப்பிக்க வேண் டும், தமிழ்நாடு நெடுஞ் சாலை ஆணையம் அமைக் கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணி யாளர் சங்கத்தினர் பறை இசை முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் திருப்பூர் நெடுஞ்சா லைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலு வலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் கே.வெங்கடசாமி, ஈரோடு பி.பாபு, கரூர் கே.செவந்திலிங்கம், திருப்பூர் ஆர்.கருப்பன் ஆகிய கோட்டத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட் டத்தில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்கா லமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவும், நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே செயல்படுத்தவும், கிராமப்புற இளைஞர் களை சாலைப்பணியாளராக பணி நியமனம் செய்யவும், உயிரிழந்தோர் குடும்பத்திலி ருந்து விண்ணப்பித்திருக்கும் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கவும் பறை இசைத்து கோரிக்கை முழங்கி போராட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி. பாண்டியம்மாள் துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.பாலசுப்பி ரமணியன் நிறைவு உரை ஆற்றினார். இதில் திருப்பூர், தாராபுரம், ஈரோடு, கரூர் ஆகிய கோட்டங்களை சேர்ந்த சாலைப்பணியாளர் கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். திருப்பூர் கோட்டப் பொருளாளர் விஸ்வ நாதன் நன்றி கூறினார்.</p>
