சுங்கவரி வசூல் வேட்டை: சாலைப்பணியாளர் சங்கம் கண்டனம்
7 Dec 2025, 3:52 pm
<p><strong>சுங்கவரி வசூல் வேட்டை: சாலைப்பணியாளர் சங்கம் கண்டனம்</strong></p>
<p>கோவை, டிச.7- தனியார் சுங்கவரி வசூல் வேட்டை நடத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் வலியுறுத் தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க கோவை மாவட்ட மாநாடு, தாமஸ் கிளப் அரங்கில் ஞாயிறன்று, மாவட்டத் தலைவர் பி.முரு கேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.ரங்கநாதன், பொருளாளர் பி.சிவக்குமார் ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன், பொருளாளர் நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ரவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம் மாநாட்டில், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தமிழக அரசு கலைத்திட வேண்டும். 3,500க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர் பணியிடங்களை ஒழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தனியார் சுங்கவரி வசூல் வேட்டை நடத்த தமிழக அரசு அனுமதிக் கக்கூடாது. சாலைப் பணியாளர் பணி யிடங்களில் கிராமப்புற இளைஞர்க ளுக்கு பணி வழங்க வேண்டும். உயி ரிழந்த சாலைப்பணியாளர்களின் குடும் பத்திலிருந்து கருணை அடிப்படையில் பணி வேண்டி விண்ணப்பித்த அனை வருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின மாவட்டத் தலைவராக பி.முருகேசன், செயலாளராக பி.முருகன், பொருளா ளராக பி.சிவக்குமார் உட்பட 8 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப் பட்டது. சங்கத்தின் மாநிலத் தலை வர் ம.பாலசுப்பிரமணியம் நிறைவுரை யாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் ஏ.விஸ்வநாதன் நன்றி கூறினார்.</p>
