நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் சாலை பணியாளர் சங்க மாநாடு தீர்மானம்
20 Nov 2025, 3:46 pm
<p><strong>நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் சாலை பணியாளர் சங்க மாநாடு தீர்மானம்</strong> </p>
<p>திருவண்ணாமலை, நவ. 20- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் திருவண்ணாமலை கோட்ட 9ஆவது மாநாடு திண்டிவனம் சாலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழனன்று (நவ.20) நடைபெற்றது. கோட்டத் தலைவர் கே.கணபதி தலைமை தாங்கி னார், கோட்டத் துணைத் தலைவர் பி.விஜயன் வர வேற்றார், மாநில துணைத்தலைவர் து.சிங்கராயன் துவக்க உரையாற்றினார், கோட்ட செயலாளர் ஏ.ஏழுமலை செயலாளர் அறிக்கையும், பொருளாளர் பி.கிருஷ்ண மூர்த்தி நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மா.பரிதிமால் கலைஞன் சிறப்புரையாற்றினார், மாநில செயலாளர் மா.மகாதேவன் நிறைவுறையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் நன்றி கூறினார். இதில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட்டு, நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசை ஏற்று நடத்த வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனம் கேட்டு விண்ணப்பம் செய்து காத்திருக்கும் சாலை பணியாளர் குடும்பத்தினருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.</p>
