பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
14 Jul 2026, 10:08 pm
<p><strong>பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருநெல்வேலி, ஜூலை 14- பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்கக் கோரி நெல்லை மாவட்ட சிஜடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும். மினி பேருந்து என சொல்லிக் கொண்டு அரசு போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க, வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசே வழங்கிட வேண்டும். ஆர்டிஓ அலுவலகம் மற்றும் காவல்துறை போடும் ஆன்லைன் அபராத கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். டோல்கேட் என்ற பெயரில் போக்குவரத்து தொழிலை சீரழிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.முருகன் தலைமை வகித்தார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரிய ஜான் ரோஸ் முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அரசு போக்குவரத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் காமராஜ், சிஐடியு வழக்கறிஞர் ராஜசேகரன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எல்.சரவணபெருமாள் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். சாலை போக்குவரத்து சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். தென்காசி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம், சாலை போக்குவரத்து சங்கம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆகிய தென்காசி மாவட்டக் குழுக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலை போக்குவரத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.தர்மராஜ் தலைமை வகித்தார். ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாநில இணைச் செயலாளர் டி.வன்னிய பெருமாள், கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர்.முருகன், போக்குவரத்து சங்க மாநில உதவித் தலைவர் எம். கருப்பசாமி, சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் குருசாமி, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம். ராஜசேகரன் மற்றும் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தலைவர் பழனிகுமாரசாமி உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் மணிகண்டன் நிறைவுரையாற்றினார்.</p>
