விபத்தில் பாதிக்கப்படும் ஓட்டுநர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து நிவாரணம் வழங்கிடுக! சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
16 Jul 2026, 9:43 pm
<p><strong>விபத்தில் பாதிக்கப்படும் ஓட்டுநர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து நிவாரணம் வழங்கிடுக! சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 16- பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். விபத்தில் பாதிக்கப் படும் ஓட்டுநர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து முழு உடல் தகுதி பெறும் வரை உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் நாகர்கோவில் வேப்ப மூடு பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எ.பகவதியப்பன் தலைமை வகித்தார். பல்வேறு சங்க நிர்வா கிகள் சி.சுரேஷ்குமார், பொன் சோபனராஜ், எஸ்.பரமசிவன், ஜான் ஸ்பின்னி, எம்.லட்சும ணன் ஆகியோர் பேசினர். சிஐடியு குமரி மாவட்ட தலைவர் ஏ.வி. பெல்லார்மின் சிறப்புரையாற்றினார். கல்வித்தகுதிக்கு ஏற்ற வாரிசு வேலை வழங்க வேண்டும். 2003க்குப் பின்பு பணியில் சேர்ந்தோர்க்கு ஓய்வூதியம் திட்டம் வழங்க வேண்டும். சுற்றுலா தலங்க ளில் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு ஓய்வறையை அமைத்துக்கொடுத்து, வாகன நிறுத்த வசதியை செய்து தர வேண்டும். காலாவதியான டோல்கேட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டது. </p>
