நலவாரிய செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும்: சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்
yesterday

நலவாரிய செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும்: சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

சேலம், செப்.14-தமிழ்நாடு அரசின் நலவாரிய செயல்பாடுகளை முழுமையாக முறைப்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

சேலம் வி.பி.சிந்தன் நினை வகத்தில் சம்மேளனத் தலைவர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஞாயிறன்று மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சம்மேளன பொதுச்செயலாளர் பி.குப்புசாமி, துணைத்தலைவர் எஸ்.கே.தியாக

ராஜன், துணை பொதுச்செயலாளர் திருமலை, சேலம் மாவட்ட பொதுச்செய லாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், தில்லி நாடாளுமன்றம் நோக்கிய சாலைப்போக்குவரத்து தொழிற்சங்கப் பேரணியில் ஆயிரம் பேர் பங்கேற்பது என்றும், அக்டோபர் 1 ஆம் தேதி தோழர் ஏ.கே.கோபாலன் பிறந்தநாளில் ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தை அமலாக்க வேண்டி நடைபெறும் போராட்டத்திற்குப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் முழு ஆதரவு அளித்துப்போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், நலவாரியப் பணப்பலன்கள் உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், சுற்றுலா வாக னங்களுக்கு பர்மீட்டை சீட் எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானித்து உரிய வரி பெற்று அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.