தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்து ஆணையரிடம் மனு கொடுக்கும் இயக்கம்! சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு

28 Jan 2026, 2:33 pm
போக்குவரத்து ஆணையரிடம் மனு கொடுக்கும் இயக்கம்! சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு
<p><strong>போக்குவரத்து ஆணையரிடம் மனு கொடுக்கும் இயக்கம்! சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு</strong></p> <p>சென்னை, ஜன. 28 - பிப்ரவரி 24 அன்று, தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து ஆணையரிடம் மனு அளிக்கும் இயக்கத்தை நடத்துவதாக தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம் செவ்வாயன்று (ஜன. 27) சென்னையில் நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் பா. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயல் தலைவர் கே. ஆறுமுக நயினார், பொதுச்செயலாளர் வி. குப்புசாமி, பொருளாளர் பி. பார்த்தசாரதி மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். &nbsp;இக்கூட்டத்தில், &ldquo;ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள எப்சி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், அதுவரை ஆந்திரா, கேரளம் போன்ற மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது போல் தமிழ்நாட்டிலும் எப்சி கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்&rdquo; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பிப்ரவரி 24 அன்று மனு அளிக்கும் இயக்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. பிப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தையொட்டி பிப். 4, 5, 6 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.