கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
12 Jan 2026, 6:20 pm

சாலை பாதுகாப்பு மாத விழா

உதகை, ஜன. 12- சாலைப்பாதுகாப்பு மாத விழாவையொட்டி, உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர்க ளுக்கான இலவச கண் பரி சோதனை முகாம் நடைபெற் றது. தேசிய சாலைப் பாது காப்பு மாத விழாவை யொட்டி, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள வட்டா ரப் போக்குவரத்து அலுவல கத்தில் வாகன ஓட்டுநர்க ளுக்கு இலவச கண் பரி சோதனை முகாம் திங்க ளன்று நடைபெற்றது. வட் டாரப் போக்குவரத்து அலு வலர் பிரபாகர் இந்த முகாமை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டு தங்களது கண் களைப் பரிசோதனை செய்து கொண்டனர்.

சமத்துவ பொங்கல்

ஈரோடு, ஜன. 12- ஈரோடு மாவட்ட காவல் துறையின் சார்பாக சமத்துவ பொங்கல் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. இதில் குழந்தைகள் மற் றும் பெண்களுக்கான உரி அடித்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுஜாதா கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசு பொருட்கள் வழங்கி, பொங் கல் வாழ்த்துகளை தெரிவித் தார்.

தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல்: சிஐடியு கண்டனம்

திருப்பூர், ஜன.12- திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத் தலைவர் பி.பழனிசாமி, மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்துள் ளனர். இதில், திருப்பூர் மாநகராட்சியில் கடந்த வாரம் 44 ஆவது வார்டில் லட்சுமி என்ற தூய்மைப்பணியாளர் வேலை செய்து கொண்டிருந்த போது, ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். அதேபோல் 28ஆவது வார் டில் தூய்மைப் பணி செய்து கொண்டிருந்த ஓட்டுநர் (புலம் பெயர்தொழிலாளி) சுரேஷ் மீது அப்பகுதியை சேர்ந்தவர் தாக்குதல் நடத்தி உள்ளார். தூய்மைப் பணியாளர்கள் மீது தொடுக் கப்பட்ட மனிதாபிமான மற்ற தாக்குதல்களா கும். இந்த அராஜகமான செயல்கள் மீது மாநகராட்சியின் அவுட்சோர்சிங் சீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் (எஸ்.டபிள்யூ.எம்.எஸ்) நிர்வாகம், காவல்துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்காதது சரியல்ல. எனவே, ஆதிக்க மனோபாவத்துடன் தாக்கியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.