முந்தய பக்கம்

சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

2 hours before
சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
<p><strong>சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு</strong></p><p>நாமக்கல், அக்.4-பள்ளிபாளையத்தில் போலீசார் நூதன முறையில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தனியார் ஜவுளி நிறுவனம் மற்றும் பள்ளிபாளையம் காவல் நிலையம் சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சாலைப்பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளிபாளையம் நான்கு ரோடு சாலையில் சனியன்று நடைபெற்றது.இதில், பள்ளிபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் கௌதம், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைக்கவசம்அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய ராட்சச உருவங்கள் கொண்ட கிங்காங் கரடி பொம்மை மற்றும் ரத்த காட்டேரி வகையிலான இரண்டு கரடி பொம்மைகள்தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளின் தலையில் அடித்து அறிவுரை வழங்கியது. மேலும் தலைக்கவசம்அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் பரிசுப் பொருள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினர். தொடர்ந்து பள்ளிபாளையம் புதிய மேம்பாலத்தின் மேலேயும், ஒருவழிப் பாதையில் வந்தவர்களையும் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களையும் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கப்பட்டது. நூதனமுறையில் நடைபெற்ற இந்த நிகழ்வை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெகுவாக ரசித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram