சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
22 Jan 2026, 2:57 pm
<p><strong>சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, ஜன.22- உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு கூட்டம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் நடைபெற்றது. சாலை விதிமுறை களைக் கவனமாகப் பின்பற்றி விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்கு வது, சாலையில் செல்லும் போது வாகனம் தீப்பிடித் ததால் அதை எப்படி கையாள்வது, விபத்து ஏற்பட்டால் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமில் உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர், தீயணைப்புத் துறை அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
