சாலைப் பாதுகாப்பும் பொதுப்பாதை பாதுகாப்பும் -ஐ.வி.நாகராஜன்
11 Nov 2025, 3:41 pm

சாலைப் பாதுகாப்பும் பொதுப்பாதை பாதுகாப்பும்

நாட்டில் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகப் புதிய விதிகளை உரு வாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அர சுகள் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பாதசாரிகளின் பாது காப்பு, மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 138(1A), 210D பிரிவுகளின்படி மோட்டார் பொருத்தப்படாத சைக்கிள், சாலைக் கட்டுமானம், பராமரிப்பு ஆகியவற்றைக் கண்காணிப்பது, போக்குவரத்து விதிகளை மீறுவதைத் தடுப்பது எனப் பல முக்கியமான அம்சங்கள் சார்ந்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

விதிகளும் நடைமுறைச் சவால்களும் சாலைகளில் பாதசாரிகளுக்குத் தனிப் பாதை அமைக்கப்பட்டாலும், அது ஆக்கிரமிக்கப்படுவதும், உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை அலட்சியமாகக் கையாள்வதும் தொடர்கிறது. சென்னை போன்ற நகரங்களில் சைக்கிள் பாதைகள் அமைக்கப்பட்டாலும், அதன் பயன்பாடு உறுதி செய்யப்படவில்லை. தலைக்கவசம் அணியாமல் செல்வது, எதிர்திசையில் பயணிப்பது போன்ற போக்குவரத்து விதி களை மக்கள் அலட்சியப்படுத்துவதும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரண மாகின்றன.

இச்சூழலில், தேசிய நெடுஞ்சாலை களில் மோட்டார் அல்லாத வாகனங்கள், பாதசாரிகள் நடமாட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்கான விதிகள் இதுவரை இயற்றப்படாத பகுதிகளில், மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் கீழ் ஆறு மாதங்களில் சாலைப் பாதுகாப்பு விதி களை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

தேசிய நெடுஞ்சாலை களில் பின்பற்றப்படும் விதிகளை அமல் படுத்த மாநில அரசுகள் விரும்பினால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கலாம் என்றும் நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. பொதுப் பாதை ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல்கள் ஒருபுறம் புதிய சாலை விதிகள் குறித்த கவனம் தேவைப்படும் நிலையில், நாடு முழுவதும் பொதுப் பாதை ஆக்கிர மிப்புப் பிரச்சனையும் நீடிக்கிறது. பொதுப் பாதையை நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த எளிய மக்களுக்கு இடையூறாகத் தனிநபர்கள் ஆக்கிரமித்து, தவறான வழி யில் பட்டா வாங்குவதும், நீதிமன்றத்தின் மூலம் பயனாளிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உத்தரவுகளைப் பெறுவதும் தொடர்கிறது. அதேபோல், நீர்நிலைகளில் நீண்ட காலமாகக் குடியிருந்து வரும் விளிம்பு நிலை மக்களின் வீடுகளை எவ்வித ஈவு இரக்கமுமின்றி, நீதிமன்ற உத்தரவை மட்டும் காரணம் காட்டி, வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் காவல்துறை யின் உதவியுடன் தொடர்ச்சியாக அப்புறப்படுத்துகின்றனர்.

வீட்டுவரி ரசீது, ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை போன்ற ஆவணங்கள் மக்க ளிடம் இருந்தும், அரசு இதில் கவனம் கொள்ளாமல் அத்துமீறுவது விமர்சனத் துக்கு உள்ளாகிறது. நீதிமன்ற உத்தரவுகள் சில சமயங் களில் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பல நேரங்களில் இவை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்போது பெரும் விமர்சனங்களையும் கேள்வி களையும் எழுப்புகின்றன. ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் தேவை உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்று, புதிய சாலைப் பாதுகாப்பு விதி களை உருவாக்குவதற்கு எல்லா மாநில அரசுகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவில் அதிக விபத்துகள் நேரும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் உள்ளதால், இதில் தமிழக அரசு துரிதம் காட்டுவது அவசியமாகும்.

அதே நேரத்தில், நீண்ட காலம் குடியிருந்து வரும் மக்களின் வீடுகள் இடிக்கப்படுவது நீதிமன்ற உத்தரவையே கேள்விக்குள்ளாக்கும் சூழலை அரசு கவலையோடு பரிசீலிக்க வேண்டும். நீதி மன்றத்தில் நிலைமைகளை விளக்கிச் சீராய்வு மனு அளிக்கலாமா என்ற விவாத மும் பொதுவெளியில் உள்ளது. மேலும், நீண்ட காலமாகப் பொதுப் பாதையாகப் பயன்படுத்தப்படும் இடங்களை ரகசிய மாகப் பட்டா வாங்கி அடைப்பதைத் தடுத்து, அரசு புறம்போக்கு நிலங்களைப் பாது காப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு குறித்து ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலரி டமும், நகராட்சியில் ஆணையரிடமும் மனுக்களை அளிக்கலாம். தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ன்படி இவர்கள் நடவடிக்கை எடுக்காவிடில், கிராம வரைபடம், அடங்கல் நகல் போன்ற தகுந்த ஆவணங்களுடன் வட்டாட்சியரிடம் மனு அளிக்க முடியும். இப்பிரச்சனைகள் குறித்து நீதி மன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப் படும்போது, நீதிபரிபாலனமும் இவைகள் மீது முழுமையான ஆய்வு செய்து உரிய நியாயம் வழங்கிட முன்வர வேண்டும் என்று எளிய மக்கள் எதிர்பார்ப்பது நியாய மானதே. தொடரும் சாலை விபத்து களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொது இடங்களைப் பாதுகாக்கவும் ஆக்கப்பூர்வ மான செயல்பாடுகளை முன்னெடுப்பது காலத்தின் தேவை.