அருமனை பேரூராட்சியில் சாலை சீரமைப்புப் பணிகள் துவக்கம்
10 Mar 2026, 3:51 pm
<p><strong>அருமனை பேரூராட்சியில் சாலை சீரமைப்புப் பணிகள் துவக்கம்</strong></p>
<p>அருமனை, மார்ச் 10- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் கடந்த நான்காண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேரூ ராட்சித் தலைவரின் தலைமையி லான நிர்வாகம் செயல்பட்டு வரு கிறது. இந் நிர்வாகத்தில் மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர் வசதி, தெருவிளக்குகள் போன்ற அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. தற்போது அதிக மழையினால் பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைத்து மேம் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பேரூ ராட்சியின் 8 வார்டு கொடிவிளை சாலையில் பத்து லட்சம் ரூபாய் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியை கவுன்சிலர் பி.ஆமோஸ் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி யில் பேரூராட்சித் தலைவர் லெதிகா மேரி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் வி.ரமேஷ் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பனிச்சவிளை- வட்ட விளை சாலையை மேம்படுத்தும் பணியை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்.</p>
