மந்தகதியில் சாலை விரிவாக்கப்பணி
19 Feb 2026, 3:09 pm
<p><strong>மந்தகதியில் சாலை விரிவாக்கப்பணி</strong></p>
<p>தருமபுரி, பிப்.19- பெல்ரம்பட்டி நெடுஞ்சாலையில் மந்த கதியில் நடை பெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரிலிருந்து பெல்ரம் பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள், கடந்த 3 மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை மூலம் தொடங்கப்பட்டது. ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடப்பட்டி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நடை பெறும் இப்பணியானது, கடந்த 3 மாதமாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இப்பணிக்காக சாலையில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள குழியில், கழிவுநீர் நிரம்பி சாலை எங்கும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். மேலும், கடந்த 3 மாதமாக இச்சாலை அடைக்கப்பட்ட தால், வாகனங்கள் 10 கிலோ மீட்டர் சுற்றி வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைந்து முடிக்கக்கூடிய சாலைப்பணி மந்த கதியில் நடைபெற்று வருவதால், இவ்வழி யாக பயணிக்கும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இச்சாலைப் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியு றுத்தியுள்ளனர்.</p>
