தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விபத்தை ஏற்படுத்தும் சாலை! வாகன ஓட்டிகள், மக்கள் அச்சம்

17 Dec 2025, 4:11 pm
விபத்தை ஏற்படுத்தும் சாலை! வாகன ஓட்டிகள், மக்கள் அச்சம்
<p><strong>விபத்தை ஏற்படுத்தும் சாலை! வாகன ஓட்டிகள், மக்கள் அச்சம்</strong></p> <p>நாமக்கல், டிச.17- பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள &nbsp;சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அவ்போது விபத்து ஏற்படுகிறது. உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் குமாரபாளை யத்தை இணைக்கும் வகையில் பள்ளிபாளையம் நகராட்சிக் குட்பட்ட அக்ரஹாரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சாலை ஆறு மாதங்களாக மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையில், தினந்தோறும் இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்கள் கீழே விழுந்து படுகா யமடைகின்றனர். மேலும், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் இருந்து ராட்சச குடிநீர் குழாய் மூலமாக திருச்செங்கோட் டிற்கு கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாய் இணைப்பு அக்ரகாரம் பகுதியில் அமைந்துள்ள நிலையில், அடிக்கடி இந்த குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டு தார் சாலைகள் சேதம் அடைந்து வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு நீர் தேங்கி சாலை சேதம் அடைந்து வருகிறது. தொடர்ந்து அவ்வப் போது நீர்க்கசிவு ஏற்படும் போதெல்லாம் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மராமத்து பணிகள் செய்வதும், பிறகு &nbsp;மீண்டும் நீர்க்கசிவு ஏற்பட்டு சாலைகள் சேதம் அடைவதும் தொடர்கதையாக உள்ளது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் தற்போது வரை சாலை சீரமைக்கவில்லை. காலை நேரங்களில் வேலைகளுக்கு செல்லும் சம யங்களில் சாலையின் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படு வதாகவும், வாகனங்கள் பழுதாவதாகவும் வேதனை தெரி விக்கின்றனர். எனவே உயிர் சேதம் ஏற்படும் முன்பாக சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.