100 நாள் வேலை திட்டம் ஊதியம் வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து சாலை மறியல்
28 Nov 2025, 2:28 pm
<p><strong>100 நாள் வேலை திட்டம் ஊதியம் வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து சாலை மறியல்</strong></p>
<p>புதுச்சேரி, நவ.28- 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்த நாட்களுக்கு மூன்று மாதகாலமாகக் கூலியை வழங்காத புதுச்சேரி அரசைக் கண்டித்தும், மீதி நாட்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தியும் செல்லிப்பட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மண்ணாடிபட்டு கமிட்டி செயலாளர் அன்புமணி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ராஜாங்கம் பேசினார். அகில இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் சங்கர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். மாநில குழு உறுப்பினர்கள் மதிவாணன், ஜோதிபாசு, உமா, கமிட்டி உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, விநாயகம், சிவசங்கரி, ரகுநாத், நாகராஜ் உள்ளிட்ட திரளான திட்டப் பயனாளிகள் இதில் கலந்துகொண்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வில்லியனூர் வட்டார வளர்ச்சி உதவி பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜன.10க்குள் வேலை செய்த நாட்களுக்குச் சம்பளமும், மீதி நாட்களுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். முன்னதாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வில்லியனூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் வந்த காவலர்கள் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.</p>
