வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்
9 Nov 2025, 2:37 pm
<p><strong>வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்</strong></p>
<p>ஈரோடு, நவ.9- நசியனூர் அருகே பழுத டைந்த சாலையை செப்பனிட்டு. வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை யில் பொதுமக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். ஈரோடு வட்டம், கூரபாளையம் கிராமத்திற்குட்பட்ட ஊனாத்தி புதூர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இப் பகுதியில் ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, காங்கயம், மொடக் குறிச்சி, கொக்கராயன்பேட்டை, நாமக்கல் ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புச் சாலை உள்ளது. இச்சாலை கூரபாளை யம், தோட்டாணி சத்திரம், சின்னி யம்பாளையம் ஆகிய ஊர்களின் வழியாக பெருந்துறை - ஈரோடு சாலையில் இணைகிறது. இச் சாலையையொட்டி ஊனாத்தி புதூர், மூலக்கரை ஆகிய குடியி ருப்புகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். தனியார் நிறுவனங்களின் கன ரக வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் அதிவேகமாக இச் சாலையில் செல்கின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகிறது. வேகத்தடை கேட்டு பல முறை மனு கொடுக்கப்பட்டது. எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனைக் கண்டித்தும், கூரபாளையம், ஊனாத்திபுதூர் சாலையிலும், ஈரோடு இணைப்பு சாலையிலும் வேகத்தடை அமைக்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயி றன்று தேசிய நெடுஞ்சாலையில் மறியல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வட்டாட்சியர், ஈரோடு, பெருந்துறை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர் தலை யிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண முன்வந்தனர். பணிகள் தொடங்கி யுள்ளது. ஓரிரு நாட்களில் முழுமை யான தீர்வு காணப்படும் என காவல் துறையினர் முன்னிலையில் அதிகாரிகள் உறுதியளித்தனர். இத னிடையே, சிபிஎம் தாலுகா செய லாளர் என்.பாலசுப்பிரமணி தலை மையில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜி.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் பி.லலிதா, கிளைச் செயலாளர்கள் பி.சௌந்திர பாண்டியன், கே.நர்மதா, எம்.மனோ கரன் மற்றும் மாதர் சங்க தாலுகா செயலாளர் எஸ்.தனலட்சுமி, வாலி பர் சங்க மாவட்டப் பொருளாளர் பி. அன்பு ஜனாதிபதி உள்ளிட்ட பலர் திரண்டனர். நடந்த விபரங்களைக் கூறி போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறி விக்கப்பட்டது.</p>
