டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல்
5 Mar 2026, 3:59 pm
<p><strong>டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல்</strong></p>
<p>சேலம், மார்ச் 5- சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியு றுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட னர். சேலம் மாநகரம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் ஒன்பதாம் காலில் ராமசாமி நகரில் டாஸ்மார்க் கடை செயல்படு கிறது. டாஸ்மார்க் கடையை அகற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் அப்பகுதி பொது மக்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் சார் பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், உடனடியாக டாஸ்மார்க் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் வியாழனன்று சீலநாயக்கன் பட்டி பிள்ளையார் கோவில் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தை தொடர்ந்து பிரச்ச னைக்குரிய டாஸ்மார்க் கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும் என அதிகாரிகள் உறுதி அளித் ததை தொடர்ந்து போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது.</p>
