முந்தய பக்கம்

உள்ளாட்சித் துறை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சாலை மறியல்

8 Dec 2025, 4:39 pm
உள்ளாட்சித் துறை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சாலை மறியல்
<p><strong>உள்ளாட்சித் துறை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சாலை மறியல்</strong></p> <p>திருவள்ளூர், டிச.8- &nbsp;குடிநீர் மேல்தேக்க தொட்டி இயக்குப வர்கள், தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 20,000 தொகுப்பூதியத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி, திங்களன்று (டிச. 8) பொன்னேரி மற்றும் திருவள்ளூரில் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. கோரிக்கைகள் திருவள்ளூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் தொகுப்பூதியத் தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உயர்நீதிமன்றம் வழங்கிய ஊதிய உயர்வு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். கொரோனா கால சிறப்புத் தொகையான ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும்.7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் எதிரில் நடைபெற்ற மறியலுக்கு சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ஜி. சந்தானம் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநில துணைத்தலைவர் கே. விஜயன் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். பொன்னேரியில் நடைபெற்ற மறிய லுக்கு மாவட்ட தலைவர் பி. கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார் உள்ளிட்ட 115 பேர் கைது செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram