தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

7 Mar 2026, 2:36 pm
புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட  விவசாய நிலங்களுக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்
<p><strong>புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட &nbsp;விவசாய நிலங்களுக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்</strong></p> <p>மயிலாடுதுறை, மார்ச் 7- &nbsp;மயிலாடுதுறையை ஒட்டியுள்ள திருவிழந்தூர், பல்லவராயன்பேட்டையில் புறவழிச்சாலைக்காக கை யகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு அடி மனை பயனாளிகள் குத் தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் &nbsp;விவசாயிகள் இணைந்து &nbsp;சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ்.துரை ராஜ் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சி.மேகநாதன், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஏ.ஆர்.விஜய் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் டி.சிம்சன், இயற்கை விவசாயி அ. இராமலிங்கம், த.இராயர், முருகன், வைரவன் உள்ளிட்ட ஏராளமான விவ சாயிகள் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை முழங்கினர். &nbsp;மொழையூர் முதல் பொட்டவெளி வரை புறவழிச்சாலைக்காக கையகப் படுத்தப்பட்ட மொழையூர், மேல நாங்குடி, லெட்சுமிபுரம், வள்ளாலக ரம், வேப்பங்குளம், கழுக்காணி முட்டம், அப்பங்குளம், பல்லவராயன் பேட்டை, திருவிழந்தூர், பொட்ட வெளி கிராமங்களில் பல தலைமுறை யாக சாகுபடி செய்யும் விவசாய நிலங் களுக்கு 2013 நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு சட்டத்தின்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த தென்னை, தேக்கு போன்ற மரங் களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். &nbsp;கையகப்படுத்தப்பட்ட நிலங்களி லிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மோட்டார் பம்பு செட்டுகளுக்கு உரிய &nbsp;இழப்பீடு வழங்க வேண்டும். புறவழிச் சாலைக்காக எடுக்கப்பட்ட நிலங்களி லிருந்து பாய்ச்சகால், வடிகால் வாய்க்கால்களை மழை - வெள்ளநீர் வடியாதபடி வாய்க்கால்களுக்கு சம்பந்தமில்லாமல் பாலம் கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போரா டினர். &nbsp;2 மணி நேரத்திற்கும் மேலாக போராட் டம் நீடித்த நிலையில், அதிகாரி கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை யடுத்து தற்காலிகமாக கைவிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.