முந்தய பக்கம்

டாஸ்மாக் கடையை மூடக் கோரி சாலை மறியல்

17 Feb 2026, 3:36 pm
டாஸ்மாக் கடையை மூடக் கோரி சாலை மறியல்
<p><strong>டாஸ்மாக் கடையை மூடக் கோரி சாலை மறியல்</strong></p> <p>அரியலூர், பிப்.17- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, கல்லாத்தூரில் இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. &nbsp;இரண்டு கடைகளும் வடவீக்கம் சாலையில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி வளாக பகுதிகளில் செயல்படுவதால் கிராமத்தில் உள்ள கூலித் தொழிலாளிகள் மற்றும் இளைஞர்கள் குறிப்பாக, மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த இரண்டு வருடமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். &nbsp;இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள், வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனாலும் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. அதுமட்டுமின்றி பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடை அருகில் அரசு விதிமுறைகளை மீறி விடிய விடிய சிலர் மதுவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாகவும், தட்டிக் கேட்கும் பொது மக்களை குண்டர்களை வைத்து மிரட்டியதாகவும் தெரிகிறது. &nbsp;இந்நிலையில் அதிருப்தியடைந்த கிராம மக்கள் அதே கல்லாத்தூர் கடைவீதியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் என போராட்டம் நடத்தினர். இரண்டு டாஸ்மாக் கடைகளை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக மாவட்ட ஆட்சியர் இங்கு வந்து உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வதாகவும் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram