அங்கன்வாடி சமையலரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்
4 Jan 2026, 5:55 pm
<p><strong>அங்கன்வாடி சமையலரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்</strong></p>
<p>திருப்பூர், ஜன.4 - திருப்பூர் கேத்தம் பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக வேலை செய்து வரும் மீனாட்சி என் பவரை தாக்கியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர், கேத் தம்பாளையம் பகுதியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் மீனாட்சி என்பவர் சமையல ராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த விஜய் சங்கர் என்பவர் சனியன்று மீனாட்சியை சந்தித்து, அவரது பேரனின் நட வடிக்கைகள் குறித்து பேசியதாக கூறப்படு கிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, விஜய் சங்கர் மீனாட்சியை உரசிய தாகவும், மீனாட்சி சத்தமிட முயன்ற போது அவரது வாயை பொத்தியதாகவும், மேலும், மீனாட்சியை தாக்கியதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, விஜய்சங்கர் அங்கி ருந்து தப்பி ஓடி விட்டார். காயமடைந்த மீனாட்சியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த னர். மீனாட்சி அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் விஜய்சங்கர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விஜய்சங்கர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், விஜய் சங்கர் அங்கன் வாடி பகுதியில் சுற்றித் திரிந்ததால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் பிச்சம்பாளையம் சாலையில் ஞாயிறன்று பகல் 11 மணி அளவில் திடீரென மறியலில் ஈடுபட முயன்ற னர். தகவலறிந்த காவல்துறையினர் உடனடி யாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். விஜய் சங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது. மேலும், அங்கன்வாடி மையம் அருகே கள்ளத்தனமாக மதுபான விற்பனை நடை பெறுவதாகவும், அதன் காரணமாகவே இது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p>
