ஆக்கிரமிப்புக்கு எதிரான சாலை மறியல்
26 Mar 2026, 2:46 pm
<p><strong>ஆக்கிரமிப்புக்கு எதிரான சாலை மறியல்</strong></p>
<p>திருவண்ணாமலை வ.உ.சி நகர் 5 ஆவது தெருவில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வலியுறுத்தி திருவண்ணாமலை - செங்கம் சாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
