தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

23 Dec 2025, 4:05 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

4 ஆவது நாளாக செவிலியர்கள் காத்திருப்புப் போராட்டம்

ஈரோடு, டிச.23- நான்காவது நாளாக செவிலியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்படி, செவ்வாயன்று 4 ஆவது நாளாக போராட் டம் தொடர்கிறது. பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற செவி லியர்களின் போராட்டத்தினை வாழ்த்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் உள் ளிட்ட சகோதார சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். கோவை இதைபோன்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் செவிலியர்கள், கருப்புத் துணிகளால் கண்கள் மற்றும் கைகளைக் கட்டிக்கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இப் போராட்டத்தை வாழ்த்தி மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சுதா, நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து தளவாட பொதுத்தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ப.கருப்ப சாமி உள்ளிட்ட சகோதார சங்க நிர்வாகிகள் பேசினர். சேலம் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம். தேவி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.

கோவையில் 4,76,353 பெண்களுக்கு  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

கோவை, டிச.23- ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், புதிதாக தேர்வு  செய்யப்பட்ட 50,648 மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 பெறு வதற்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முதற்கட்டத்தில் கோவையில் 4,25,705 பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், தற்போது இரண் டாம் கட்டமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கூடுத லாக 50,648 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்  மூலம் கோவை மாவட்டத்தில் மொத்தம் 4,76,353 மகளிர் இத் திட்டத்தால் பயன்பெறுகின்றனர். இதற்காக ஆண்டுக்கு ரூ.571 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத் தினால் பயனடைந்த செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில் பேசுகை யில், ஏழ்மையான குடும்பச் சூழலில் சிறு செலவுகளுக்கும் கணவர் அல்லது மகனை எதிர்பார்க்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது முதலமைச்சர் வழங்கிய இந்த உரி மைத் தொகை எனது சுயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது, என்றார். இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் செந்தில் அண்ணா கூறுகையில், கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை மாவட்டத்தின் பல்வேறு பகுதி பெண்க ளுக்கு பேருதவியாக உள்ளது. வட்டாரங்களைச் சேர்ந்த  மகளிரும் இத்திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவ தாகக் கூறி முதலமைச்சருக்குத் தங்கள் நன்றியினைத் தெரி வித்துள்ளனர். மேலும், மகளிருக்காக விடியல் பயணம், சுயஉதவிக்குழு கடனுதவி உள்ளிட்ட திட்டங்களை  தமிழக முதல்வர் செயல்படுத்தி வருவது, பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, என்றார்.

மேம்பாலத்தில் தொடரும் சாலை விபத்து: இரும்பு தடுப்புகள் அமைப்பு

நாமக்கல், டிச.23- பள்ளிபாளையம் மேம்பாலத்தில் தொடரும் சாலை விபத்தால், ஒருவழிப் பாதையில் வாகனங்கள் செல்வதை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்திலிருந்து, திருச்செங்கோடு சாலைக்கு செல்லும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதி தாக மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோட் டில் இருந்தும், திருச்செங்கோட்டில் இருந்தும் வரும் வாக னங்கள் சங்ககிரி செல்லும் சாலையில் இறங்கும் வகையில் ஒரு வழிப்பாதையாக மேம்பாலம் அமைந்துள்ளது. விதி முறைகளுக்கு மாறாக சங்ககிரி சாலையில் இருந்து வரும்  வாகன ஓட்டிகள் ஒருவழிப்பாதையில் அடிக்கடி பாலத்தின் மேலே ஏறி, ஈரோடு, திருச்செங்கோடு போன்ற பகுதிகளுக்கு செல்வதால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து  பள்ளிபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் கௌத மன் உத்தரவின் பெயரில், பள்ளிபாளையம் போலீசார் திருச் செங்கோடு மற்றும் ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் சங்ககிரி சாலையில் செல்லும் இடத்தில், 4 இரும்பு தடுப்பு கள் (டிவைடர்) அமைத்தனர். மேலும், போலீசார் இருந் தும் கண்டு கொள்ளாமல் ஒருவழிப் பாதையில் செல்ல  முயன்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஒரு வழிப் பாதையில் விதிமுறைகளுக்கு மாறாக, வாகனங்கள் செல்லாத வகை யில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

குடிநீர் திட்டம்: குழாய் பதிக்கும் பணி தீவிரம்

கோவை, டிச.23- 24 மணி நேர குடிநீர் விநியோகத் திட் டத்தின் கீழ், சுங்கம் ரவுண்டானா பகுதியில் பிரதான குழாய் பதிக்கும் பணிகள் துரித மாக நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சியின் 24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டத்தின் கீழ், திருச்சி சாலை சுங்கம் ரவுண்டானா பகுதியில் பிர தான குழாய் பதிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிர பாகரன் செவ்வாயன்று நேரில் ஆய்வு செய் தார். ரூ.646.71 கோடி மதிப்பீட்டில் செயல் படுத்தப்படும் இத்திட்டத்தில், 33 மேல்நிலை  நீர்த்தேக்கத் தொட்டிகளில் 30 இன் கட்டுமா னம் முடிந்துள்ளது. 75 கி.மீ. பிரதான குழாய் பதிக்கும் பணியில் 66.25 கி.மீ., 1798 கி.மீ. பகிர்மான குழாயில் 1747.63 கி.மீ. முடிக்கப் பட்டுள்ளது. 1.50 லட்சம் வீட்டு இணைப்பு களில் 1,41,062 இணைப்புகள் வழங்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் உள்ளன. இதில் 95,947 இணைப்புகளுக்கு 24 மணி நேர குடிநீர் விநி யோகம் தொடங்கியுள்ளது. சிவராம் நகர், வள்ளியம்மாள் லேஅவுட், புலியகுளம், லட்சுமி மில்ஸ் காலனி, நஞ் சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான குழாய் பதிக்கும் பணியில் விடுபட்டிருந்த 300 மீட்டர் தூரத் திற்கு, தேசிய நெடுஞ்சாலைத் துறை அனு மதியுடன் சுங்கம் ரவுண்டானாவில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி சுங்கம் பிரதான சாலையில் மூன்று புறமும்  பொக்லைன் உதவியோடு பணிகள் நடை பெற்றதால், கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்ப வர்கள் மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மலைப்பாதைகளில் கவிழ்ந்த வாகனங்கள்!

ஈரோடு, டிச.23- பர்கூர் மற்றும் காரப்பள்ளம் ஆகிய மலைப்பாதைகளில் சரக்கு வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. கேரளம் மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந் தவர் ஆசிக் (30). இவர், கர்நாடகா மாநிலம், உஸ்பேட்டாவில் இருந்து கொய்யா பழங் களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பர்கூர் மலைப்பாதை வழியாக திங்களன்று சென்று கொண்டிருந்தார். வரட்டுப்பள்ளம் அணை அருகே மலைப்பாதை வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஆசிக்  லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச் சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, கர்நாடகா மாநிலம், மாண் டியா பகுதியிலிருந்து ஈரோட்டிற்கு கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் -  மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி  ஒன்று திங்களன்று சென்றுக் கொண்டிருந் தது. சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முரு கன் (53) என்பவர் லாரியை ஓட்டியுள்ளார். ஆசனூரை அடுத்த தமிழக - கர்நாடகா எல் லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடி மலைப்பாதை வளைவில் திரும்பியபோது, பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந் தது. இதில், ஓட்டுநர் முருகன் லேசான காயங் களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், முருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாக்குகள் குறைப்பு: வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு

ஈரோடு, டிச.23- ஈரோடு மாவட்டத்தில் 3.25 லட்சம் வாக்கு கள் குறைந்துள்ள போதும், வாக்குச்சாவடி களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கிய போது, ஈரோடு மாவட்டத் தில் 19 லட்சத்து 97 ஆயிரத்து 189 வாக்காளர் இடம் பெற்றிருந்தனர். கணக்கீட்டு படிவங் கள் வழங்கி பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்ட போது, 3 லட்சத்து 25 ஆயி ரத்து 429 பேர் பட்டியலில் இடம் பெற வில்லை.  அதேசமயம் 2,222 ஆக இருந்த வாக்குச் சாவடிகள், 2357 ஆக உயர்த்தப்பட்டுள் ளது. 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள  வாக்குச்சாவடிகள் இரண்டாகப் பிரிக்கப்பட் டுள்ளது. அதேபோல பழுதடைந்த, செயல் படாத கட்டடங்களில் அமையப்பெற்ற வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படை யில் வாக்குச்சாவடிகள் உயர்ந்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள் ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.