தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

1 Feb 2026, 3:51 pm
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
<p><strong>சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி</strong></p> <p>பெரம்பலூர், பிப்.1 - &nbsp;தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறை மங்கலம் 3-ரோடு சாலை சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் துறைமங்கலம் த.சு.லு.தி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேர ணியை, மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை &nbsp;சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துறைமங்கலம் த.சு.லு.தி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, &nbsp;பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிர சுரங்களை வழங்கினர். இந்த பேரணியானது துறைமங்கலம் 3-ரோடு சாலை சந்திப்பில் &nbsp;தொடங்கி பாலக்கரையில் நிறைவடைந்தது. &nbsp;இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலு வலர் க.கண்ணன், கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலை) கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். &nbsp;தஞ்சாவூர் &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. &nbsp;இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார். 150-க்கும் மேற் பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் &nbsp;பேரணியில் கலந்து கொண்டு, சாலைப் பாது காப்பு விழிப்புணர்வு தொடர்பான முழக்கங்களை &nbsp;எழுப்பியவாறு சென்றனர். முதுகலை ஆசிரி யர் முனைவர் சற்குணம் நன்றி கூறினார். &nbsp;அரியலூர் அரியலூர் மாவட்ட காவல்துறை, ஜெயங் கொண்டம் காவல்துறை, போக்குவரத்து காவல் துறை சார்பில், ஜெயங்கொண்டம் நகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தினேஷ்குமார் பேரணியை துவக்கி வைத்து போக்குவரத்து விதி கள் பற்றியும், அதனை வாகன ஓட்டிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். விபத்து இல்லாத மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இதற்கு வாகன ஓட்டி கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என &nbsp;அறிவுறுத்தினார். ஜெயங்கொண்டம் போக்கு வரத்து காவல் நிலைய ஆய்வாளர் மதிவா ணன், சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி எடுத்துரைத்தார். &nbsp;இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் காவல் &nbsp;நிலைய ஆய்வாளர் பாலாஜி மற்றும் உதவி &nbsp;ஆய்வாளர், போக்குவரத்து காவல் உதவி ஆய் வாளர் சங்கர், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரஜினி, காவல் ஆளினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.