சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
23 Feb 2026, 6:26 pm
<p><strong>சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு</strong></p>
<p>திருப்பத்தூர், பிப் 23- திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மற்றும் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 90 நாட்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சீட் பெல்ட் அணிவது, சாலையை கடப்பது, பள்ளி மாணவர்கள் வாகனங்களை இயக்க கூடாது மேலும் 18 வயது நிரம்பிய பிறகு உரிய உரிமம் பெற்ற பிறகு வாகனங்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் ஏற்படுத்தினார். இதில் அகில இந்திய மோட்டார் வாகன சங்க தலைவர் அஸ்வத் அகமத், போக்குவரத்து துணை ஆணையர் சம்பத், வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராகவன், திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் முரளி, ஆம்பூர் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் அமர்நாத், சிறப்பு காவல்துறை ஆய்வாளர் ரூபி திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
