சாலைப்பணியாளர்கள் போராட்டம்
22 Dec 2025, 4:02 am
<p>பொள்ளாச்சி, டிச.22- நெடுஞ்சலை பராமரிப்புப் பணியை அரசே செயல்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஒப் பாரி போராட்டத்தில் ஈடுபட்ட னர். சாலைப்பணியாளர்களின் 41-மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப டுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். நெடுஞ்சலை பராமரிப்புப்பணியை அரசே செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க பொள்ளாச்சி கோட்டம் சார்பில் திங்க ளன்று ஒப்பாரி முழக்க போராட்டம் நடை பெற்றது. இதற்கு பொள்ளாச்சி வட்ட கிளை தலைவர் வி.சின்னமாரி முத்து தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செய லாளர் எம்.பாலசுப்ரமணியம், கோட்டச் செய லாளர் ச.ஜெகநாதன் ஆகியோர் பேசினர். போராட்டத்தினை வாழ்த்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில துணைத் தலைவர் வி.சாந்தி பேசினார். முடிவில், கோட்டப் பொருளாளர் டி.சந்திர போஸ் நன்றி கூறினார். கோபி கோபி கோட்டப் பொறியாளர் அலுவல கம் முன்பு நெடுஞ்சாலைதுறை சாலைப்பணி யாளர்கள் சங்கம் சார்பில் ஒப்பாரி முழக்க போராட்டம் நடைபெற்றது. இதில் திரளா னோர் பங்கேற்றனர்.</p>
