தோழர் ஆர்.கே.தண்டியப்பன் நினைவகம் திருப்புவனத்தில் பெ.சண்முகம் திறந்து வைத்தார்
20 Jun 2026, 11:46 pm
<p><strong>தோழர் ஆர்.கே.தண்டியப்பன் நினைவகம் திருப்புவனத்தில் பெ.சண்முகம் திறந்து வைத்தார்</strong></p><p>திருப்புவனம், ஜூன் 20 - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ரயில்வே பீடர் ரோடு மருதுபாண்டியர் 2-வது தெருவில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சிவகங்கை மாவட்ட முன்னாள் மாவட்டச் செய லாளர் - மறைந்த தோழர் ஆர்.கே. தண்டியப்பன் நினைவாகக் கட்டப்பட் டுள்ள புதிய ஒன்றியக் குழு அலுவலகக் கட்டடத்தை கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் திறந்து வைத்தார். ஆர்.கே. தண்டியப்பன் உருவப் படத்தையும், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் உருவப் படங்களையும் மாவட்ட முன்னாள் செயலாளர் எம். கருப்பு ராஜா திறந்து வைத் தார். ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். மாநி லச் செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே. பொன் னுத்தாய், மாவட்டச் செயலா ளர் ஏ.ஆர்.மோகன் ஆகி யோர் பேசினர். நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்க பூபதி, அ.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் மெய்யப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர் கள் அ.ஜெயராமன், எம். ரவி, எம். நீலமேகம், வி. சௌந்திரப்பாண்டியன், பி. கண்ணன், போ. வசந்தி, எஸ்.பி. முத்துராமன், சி. மாரிமுத்து, எம். சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
