தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆர்.கே.நகர் 41ஆவது வட்டத்தில் குடிநீர் குழாய் மாற்றும் பணிகளை தொடங்க சிபிஎம் வலியுறுத்தல்

10 Aug 2026, 11:13 pm
ஆர்.கே.நகர் 41ஆவது வட்டத்தில் குடிநீர் குழாய் மாற்றும் பணிகளை தொடங்க சிபிஎம் வலியுறுத்தல்

ஆர்.கே.நகர் 41ஆவது வட்டத்தில் குடிநீர் குழாய் மாற்றும் பணிகளை தொடங்க சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 10-ஆர்.கே.நகர் 41ஆவது வட்டத்தில் குடிநீர் குழாய் மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் பா.விமலா, பகுதிச்செயலாளர் வெ.ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் மண்டலம் 4 செயற் பொறியாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் 41ஆவது வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வடசென்னை வளர்ச்சி நிதியிலிருந்து புதிய குடிநீர் குழாய் மாற்றுவதற்கான கடந்த 2025இல் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த பணிகள் துவங்கி நிறுத்தப்பட்டுள்ளது கண்ணகி நகரில், கோபால் நகரில் ஒரு தெருவில் மட்டும் பைப் மாற்றப்பட்டுள்ளது. கண்ணகி நகரில் குடிநீர் பிரச்சனை என்பது பெருமளவு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் நகர் பகுதியில் பழுதான பைப்புகள் மாற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கண்ணகி நகர், கருமாரியம்மன் நகர் பகுதியில் தொடர்ச்சியாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. அதனடிப்படையில் புதிய குடிநீர் பைப்புகள் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்தப் பணி ஒரு தெருவில் மட்டுமே நடைபெற்று.ள்ளது. மற்ற தெருவுகளில் குடிநீருடன் கழிவுநீருடன் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகிறார்கள்.

எனவே இந்த பகுதியில் உடனடியாக பணிகளை துவக்கி மக்களின் அடிப்படை தேவையான குடிநீரை பூர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்யக்கூடிய ஒப்பந்த தாரர் பல இடங்களில் பணிகளை செய்து

வருகிறார். ஆனால் 41ஆவது வட்டத்தில் மட்டும் முறையாக பணிகள் செய்ய வில்லை. ஆகையால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், நிர்வாகிகள் ஜோதிபாசு, ஜானகி, வேலு, விக்கி ஆகியோர் உடன் இருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.