முந்தய பக்கம்

23.11% வாக்குகள் தோற்றும் சாதனை  படைத்த ஆர்ஜேடி கட்சி

15 Nov 2025, 1:19 pm
23.11% வாக்குகள் தோற்றும் சாதனை  படைத்த ஆர்ஜேடி கட்சி
<p>23.11% வாக்குகள் தோற்றும் சாதனை &nbsp;படைத்த ஆர்ஜேடி கட்சி</p> <p>243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடை பெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. &nbsp;இந்த தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சி தோல்வி யடைந்த பொழுதிலும், அக்கட்சி அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத் துள்ளது. குறிப்பாக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ள பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ஆகிய கட்சி களை பின்னுக்கு தள்ளி 23.11% வாக்கு களை பெற்று ஆர்ஜேடி முதலிடம் பிடித்துள்ளது. பாஜக அதிக இடங்களை (89 தொகுதிகள்) வென்றாலும் 20.08% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இது பாஜகவை விட 2.92% சதவீதம் மற்றும் ஜேடியு-வை (85 தொகுதிகள் - 19.25% வாக்குகள்) விட 3.75% அதிகம் ஆகும். ஆனால் கூடுதலாக (144) வேட்பா ளர்களை களமிறக்கியதால் அக்கட்சி &nbsp;23.11% வாக்குகளை பெற்றுள்ளது என பாஜக ஆதரவு &ldquo;கோடி மீடியா&rdquo; ஊட கங்கள் ஆர்ஜேடி-யின் சாதனையை திசை திருப்பி வருகின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram