முந்தய பக்கம்

கேரளத்தில் சிபிஎம் கட்சிக்கு ஆதரவாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத் பிரச்சாரம்

30 Mar 2026, 3:40 pm
கேரளத்தில் சிபிஎம் கட்சிக்கு ஆதரவாக  ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத் பிரச்சாரம்

கேரளத்தில் சிபிஎம் கட்சிக்கு ஆதரவாக  ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத் பிரச்சாரம்

140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஏப்ரல் 9 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்று, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜன நாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர்களை ஆதரித்து “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி பிரசாத் பிரச்சாரம் செய்ய உள்ளார். செவ்வாய் முதல் ஏப்ரல்  2ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு பீகார் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி பிரசாத்தின் தேர்தல் பரப்புரை நடைபெற உள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமை யிலான எல்டிஎப் கூட்டணி 3ஆவது முறையாக ஆட்சியில் அமரவும், எல்டிஎப் கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் தேஜஸ்வி பிரசாத்தின் தேர்தல் பிரச்சாரப் பயணம் அமையும் என ஆர்ஜேடி கட்சி கூறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram