‘மோடியைப் போன்று ஞானேஷ் குமாரும் மிகப்பெரிய பொய்யர்’ராஷ்டிரிய ஜனதா தளம் கடும் தாக்கு!
6 Oct 2026, 9:32 pm

‘மோடியைப் போன்று ஞானேஷ் குமாரும் மிகப்பெரிய பொய்யர்’ராஷ்டிரிய ஜனதா தளம் கடும் தாக்கு!

பாட்னாபிரதமர் மோடியைப் போன்று தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் மிகப்பெரிய பொய்யர் என ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும்ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,”தேர்தல் முறைகேடு, சந்தேகம் தொடர்பான கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் பதில் அளித்தாலே எதிர்க்கட்சிகள் திருப்தியடையும். ஆனால் தற்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்எதிர்க்கட்சிகளையும் இந்த நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்தினால் போதாது; அவர் உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதி சூர்யகாந்த் அவர்களையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சிக்கிவிட்டார்.கடந்த செப்டம்பர் 26 அன்று வெளியான தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பில், ‘படிவம்

6-இல் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழிப் படிவம் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று புள்ளி எண் 3-இல் எழுதப்பட்டுள்ளது. இது ஞானேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு. படிவம் 6-இல் உறுதிமொழியைச் சேர்க்க உச்சநீதிமன்றம்தான் கூறியது என்று அவர் வெளிப்படையாகப் பொய்சொல்லியிருக்கிறார். ஆனால், இன்றோ (திங்கள்கிழமை) தலைமை நீதிபதி அதை முற்றிலுமாக மறுத்துள்ளார்;

‘நாங்கள் அப்படி எதுவுமே கூறவில்லையே’ என்று நீதிபதி சூர்யகாந்த் தெளிவுபடுத்தியுள்ளார். இப்படியே போனால்ஞானேஷ் குமார் இனி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடமே பிரமாணப் பத்திரம் கேட்டாலும் கேட்பார். அப்படிஒரு அதிகாரத்தின் உச்சத்தில் ஞானேஷ் குமார் மிதந்து வருகிறார். அதாவது, மோடியைப் போன்று தம்மை கடவுளுக்கு மேலானவராக அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார்” என அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.