இ-சிகரெட் பயன்படுத்திய கிரிக்கெட் கேப்டன் ரியான் பராக்!
29 Apr 2026, 3:55 pm
<p>ஐபிஎல் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், டிரஸ்சிங் ரூமில் இ-சிகரெட் பயன்படுத்திய காட்சி நேரலையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தியாவில் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டை கடந்த 2019-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடந்த பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான போட்டியின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், டிரஸ்சிங் ரூமில் இ-சிகரெட் பயன்படுத்திய காட்சி நேரலையில் வெளியானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரியான் பராக்கின் இந்த நடவடிக்கை பிசிசிஐ விதிமுறைகளை மீறியதாகும். மேலும், இ-சிகரெட் பயன்படுத்திய ரியான் பராக் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><br></p>
