முந்தய பக்கம்

களக்காடு உப்பாற்றை பாதுகாக்க கோரிக்கை

2 Jun 2026, 10:50 pm
களக்காடு உப்பாற்றை பாதுகாக்க கோரிக்கை
<p><strong>களக்காடு உப்பாற்றை பாதுகாக்க கோரிக்கை</strong></p><p>திருநெல்வேலி, ஜூன் 2- நெல்லை மாவட்டம், களக்காடு நகரத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் உப்பாற்றில் சாக்கடை கழிவு நீர் கலந்து கூவமாக மாறிவிட்டது இதேபோல குடிதாங்கி குளம் மற்றும் மாணிக்கங் குளத்தின் நிலையும் சாக்கடை கழிவுநீரால் சூழப்பட்டுள் ளது இந்நிலையில் களக்காடு நகராட்சி நிர்வாகம் சாக்கடை கழிவுநீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க உப்பாற்றை ஆக்கிரமித்து டேங்க் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர் எந்த அடிப்படையில் இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது என்று தெரியவில்லை, பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தவில்லை இதே போல குடிதாங்கி குளத்திலும் மாணிக்கங் குளத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகிலும் சாக்கடை கழிவுநீர் டேங்க் அமைக்க முயற்சி செய்து வருகின்றனர் ,எனவே மக்கள் விரோத திட்டத்தை கைவிடவும் உப்பாற்றை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுக்கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram