தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிர் விளையாட்டு

16 May 2026, 8:22 pm
புதிர் விளையாட்டு

புதிர் விளையாட்டு

வாடா மலர்களே, கதை வடிவப் புதிர்களுக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் போதும் என்று சொல்லும் வரையில் இனிமேல் வாரா வாரம் கதைப்புதிர்கள் உங்களைத் தேடிவரும்.

சவால் படகில் ஆற்றைக் கடப்பது எப்படி?

அம்மா, அப்பா, மகள் மூன்று பேர் பக்கத்து ஊரில் இருக்கும் உறவினர் வீட்டுக்குப் போகலாம் என்று புறப்படுகிறார்கள். போகும் வழியில் ஓர் ஆறு இருக்கிறது. அதில் வெள்ளமாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை எப்படிக் கடக்கலாம் என்று அம்மாவும் அப்பாவு யோசிக்கிறார்கள். அப்போது மகள் சற்றுத் தொலைவில் ஒரு படகு கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறாள். மூவரும் உற்சாகத்தோடு அதை நோக்கிச் செல்கிறார்கள்.

படகுக்குப் பக்கத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். அதில், “இந்தப் படகு 100 கிலோ எடையைத்தான் தாங்கும். அதற்கு மேல் எடை கூடினால் ஆற்றில் படகு கவிழ்ந்துவிடும்,” என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

அப்பாவுக்குக் கவலையாகிவிடுகிறது. ஏனென்றால் அவருடைய எடை 60 கிலோ. அம்மாவின் எடை 50 கிலோ. மகளின் எடை 30 கிலோ. மூன்று பேரின் மொத்த எடை 140 கிலோ! அப்போது அம்மாவின் முகம் விளக்குப் போட்டது போலப் பளிச்சிடுகிறது. அம்மாவுக்கு ஏதோ நல்ல யோசனை உதித்திருக்கிறது என்று புரிந்துகொண்டார் அப்பா. அம்மா தன் யோசனையைச் சொன்னார். அப்பா “அருமை” என்று பாராட்டிவிட்டு அதைச் செயல்படுத்தினார். மூன்று பேரும் பாதுகாப்பாக அக்கரையை அடைந்தார்கள். அம்மா சொன்ன அந்த யோசனை என்ன?

விடை: முதலில் அம்மாவை இக்கரையிலேயே விட்டுவிட்டு, அப்பாவும் மகளும் (60 + 30= 90 கிலோ) படகில் செல்கிறார்கள். மகளை அக்கரையில் விட்டுவிட்டு அப்பா மட்டும் படகில் திரும்பி வருகிறார். இப்போது அம்மா (50 கிலோ) மட்டும் படகைச் செலுத்தி அக்கரையை அடைகிறார். உங்களைப் போலத் துணிச்சல்காரியான மகள் (30 கிலோ) அங்கிருந்து இக்கரைக்குத் தனியாகத் திரும்பி வருகிறாள். இப்போது அப்பாவும் மகளும் படகில் சென்று அம்மாவுடன் சேர்ந்துகொள்கிறார்கள். இந்த விடையைத் தங்கள் சொந்த முயற்சியில் கண்டுபிடித்தவர்களுக்கும் கண்டுபிடிக்க முயன்றவர்களுக்கும் பாலர் பூங்கா வாழ்த்துகள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.