தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

22 Jan 2026, 2:57 pm
கோயம்புத்தூர் முக்கிய  செய்திகள்

பாதாள சாக்கடை நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

உடுமலை,ஜன.22- உடுமலை நராட்சியின் பாதாள சாக் கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்படா மல் உள்ளதால், கழிவு  நீர் சுத்திகரிப்பு  செய்யப்படாமல்  ஓடையில் செல்கிறது.  இதனால் நோய் தொற்று பரவும் ஆபயம்  ஏற்பட்டுள்ளது. உடுமலை நகராட்சியில் மொத்தம்  உள்ள 33 வார்டுகளில் 80 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  கடந்த 2013 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வா கத்தின் சார்பில் ரூ.56.7 கோடி மதிப்பில்  நகர் பகுதி முழுவதும் சுமார் 97 கிலோ  மீட்டர் நீளத்தில் 3900 இறங்கு குழாய்கள்  மூலம் சாக்கடை நீர் கொண்டு செல்ல  ஏதுவாக ஏரிப்பாளையம் பகுதியில்  7.81 எம்.எல்.டி திறன் கொண்ட சுத்திக ரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியாலும், சுத்திகரிப்பு நிலையம் முறையாக பரா மரிப்பு செயல்படாமல் இருப்பதாலும், நிலையத்திற்கு கொண்டு வரப்படும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்யப்ப டாமல் அருகில் உள்ள ராசவாய்கால் ஓடையில் இரவு நேரங்களில் சட்டவி ரோதமாக  திறக்கப்படுகிறது. இதனால்  அப்பகுதி முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் துர்நாற்றம்  வீசுகிறது. மேலும், இந்த நீர் குறுச்சேரி  வழியாக உப்பாறு அணைக்கு சென்று  அடைகிறது. சாக்கடை நீர் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் ஓடை நீரில் குடிநீர் மாசுபடும் அபாயம் உள் ளது. எனவே உடனடியாக நடவடிக்கை  எடுக்க அப்பகுதி அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிப்.12. வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் மார்க்சிஸ்ட் கட்சி முழு ஆதரவு

திருப்பூர், ஜன.22- பிப்ரவரி 12 ஆம் தேதி திருப்பூர் மாவட் டத்தில் 7 மையங்களில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தொழிற்சங்கங்கள், எஸ்கேஎம் விவசாய கூட் டமைப்பு அறிவித்துள்ளன. இந்த போராட் டத்தை முழு வெற்றிப்பெற செய்ய வைப்பது  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வியாழ னன்று தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயற் குழு உறுப்பினர் ஆர்.காளியப்பன் தலைமை  வகித்தார். இதில், கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  இதில், ஒன்றிய மோடி அரசின் தொழி லாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகள், ஒன்றிய அரசின் தொழிலாளர் கொள்கை சிரம்  சக்தி நிதி என்று, மக்கள் உரிமைகள் மற்றும் நலத்திட்டங்கள் மீது மேற்கொள்ளப்படும் பன்முக தாக்குதல்களுக்கு எதிராக, அமெரிக்கா 500 சதவிதம் வரி விதிப்பதாக மிரட்டுவது பற்றி மெளனம் காக்கும் மோடி  அரசை கண்டித்தும், 2026 பிப்ரவரி 12 ஆம்  தேதி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம்  நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கங் கள், எஸ்கேஎம் விவசாய கூட்டமைப்பு அறி வித்துள்ளன.  இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை  திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக்குவது எனவும், உடுமலை, அவிநாசி, ஊத்துக் குளி, தாராபுரம், பல்லடம், காங்கேயம் ஆகிய  ஏழு மையங்களில் நடைபெறும் மறியல்  போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் பங்கேற்று வெற்றி பெற செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆய்வுக்கூட்டம்

திருப்பூர், ஜன.22- திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகக்கூட்டரங்கில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நார ணவரே தலைமையில் வியா ழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரு வாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, உங்களுடன் ஸ்டாலின் திட்ட  முகாமில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தேசிய முதியோர் ஓய்வூதியம், விதவை மற்றும் ஆதரவற்ற  விதவைகள் ஓய்வூதியம்,  உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் மற்றும் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கு வது குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

பாதாள சாக்கடை நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

உடுமலை,ஜன.22- உடுமலை நராட்சியின் பாதாள சாக் கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்படா மல் உள்ளதால், கழிவு  நீர் சுத்திகரிப்பு  செய்யப்படாமல்  ஓடையில் செல்கிறது.  இதனால் நோய் தொற்று பரவும் ஆபயம்  ஏற்பட்டுள்ளது. உடுமலை நகராட்சியில் மொத்தம்  உள்ள 33 வார்டுகளில் 80 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  கடந்த 2013 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வா கத்தின் சார்பில் ரூ.56.7 கோடி மதிப்பில்  நகர் பகுதி முழுவதும் சுமார் 97 கிலோ  மீட்டர் நீளத்தில் 3900 இறங்கு குழாய்கள்  மூலம் சாக்கடை நீர் கொண்டு செல்ல  ஏதுவாக ஏரிப்பாளையம் பகுதியில்  7.81 எம்.எல்.டி திறன் கொண்ட சுத்திக ரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியாலும், சுத்திகரிப்பு நிலையம் முறையாக பரா மரிப்பு செயல்படாமல் இருப்பதாலும், நிலையத்திற்கு கொண்டு வரப்படும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்யப்ப டாமல் அருகில் உள்ள ராசவாய்கால் ஓடையில் இரவு நேரங்களில் சட்டவி ரோதமாக  திறக்கப்படுகிறது. இதனால்  அப்பகுதி முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் துர்நாற்றம்  வீசுகிறது. மேலும், இந்த நீர் குறுச்சேரி  வழியாக உப்பாறு அணைக்கு சென்று  அடைகிறது. சாக்கடை நீர் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் ஓடை நீரில் குடிநீர் மாசுபடும் அபாயம் உள் ளது. எனவே உடனடியாக நடவடிக்கை  எடுக்க அப்பகுதி அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.