கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
21 Nov 2025, 5:11 pm

வீட்டுமனைகளில் தேங்கியுள்ள மழைநீரால் நோய் பரவும் அபாயம்

உடுமலை, நவ.21- விளைநிலங்களில் புதிதாக உரு வாக்கப்பட்ட வீட்டு மனைகளில் தேங் கிய மழை நீரால், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் கடந்த மாதம் முதல் பருவமழை அதிக அளவில் பெய்து வரு கிறது. இந்நிலையில் கிராமங்களில் இரு க்கும் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டும னைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு நீரேற்றும் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டிகள் அனைத்தும் திருமூர்த்தி அணைக்கு அருகில் அமை க்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத் தின் கீழ் பராமரிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்தும் தனி யார் பராமரிப்பின் கீழ் விடப்பட்டுள் ளது. இந்த தனியார் நிறுவனங்கள் குடிநீர் தொட்டிகளை பராமரிக்க போதிய ஆட் களை நியமிக்காமல் உள்ளனர். எனவே வீட்டு மனைகளில் தேங்கி உள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து தேவையான அளவு குளோரின் கலந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்று அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

புதர் மண்டிக்கிடக்கும் அரசு கட்டிடங்கள்

உடுமலை,நவ.21- வேளாண் துறைக்கு சொந்தமான கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை, மடத்துக் குளம் தாலுகா பகுதியில் இருக்கும் வருவாய் கிரா மங்களில் வேளாண் துறைக்கு சொந்தமான கட்டி டங்கள் அதிக அளவில் பயன்படுத்த முடியாத நிலை யில் உள்ளன. முன்பு இந்த கட்டிடத்தில் வேளாண் துறை அலுவர்கள் குடும்பத் துடன் தங்கும் வகையில் குடி யிருப்பு அறைகள் என அனைத்து வசதிகளுடன் கட் டப்பட்டு அலுவலர்கள் பயன் படுத்தி வந்தனர். தற்போது இந்த கட்டிடங் கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளன. இதனால் அலுவ லர்கள் இதை பயன்படுத் துவது இல்லை. பல கிராமங் களில் கட்டிடம் மட்டுமே உள் ளது. அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை முறையாக பராமரித்து, ஆக்கிரமிப்பு களை அகற்ற உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள் ளது.

தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா அமராவதி சர்க்கரை ஆலை?

உடுமலை,நவ.21- அமராவதி சர்க்கரை ஆலையை தனியா ருக்கு விடப்படாது என அறிவிப்பு வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட் டுள்ள அமராவதி சர்க்கரை ஆலையை மீண் டும் இயக்குவது தொடர்பாக சில மாதங்க ளுக்கு முன்பு தான் ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. மேலும், அமைச்சர்கள் மற்றும் முதல்வர் அறிவித்த வல்லுநர் குழு ஆய்வு செய்து சென்றபின், இதுவரை சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க எவ்வித அறிவிப்பும் வர வில்லை. இந்நிலையில், இந்த ஆலையை தனியாருக்கு வழங்கப்பட உள்ளதாக சுற்று வட்டாரப் பகுதிகளில் செய்தி பரவி வருகி றது. விவசாயிகள் மத்தியில் பரவி வரும் இந்த செய்தி தனியாருக்கு தந்துவிடுவார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடி யாக அரசு உரிய அறிவிப்பு வெளியிட வேண் டும். மேலும், நாட்டின் முதல் கூட்டுறவு சர்க் கரை ஆலையை நவீனப்படுத்த தமிழக அரசு தேவையான நிதியை ஒதுக்கி, ஆலையை மீண்டும் அரசே ஏற்று நடத்தும் என்று அறி விக்க வேண்டும். ஆலை தனியாருக்கு வழங் கப்படாது என அறிவிப்பு வெளியிட்டால் மட் டுமே நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.