தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூலப்பொருட்கள் விலை உயர்வு: டயர் ரீட்ரேடிங் கட்டணத்தை உயர்த்த முடிவு

19 Feb 2026, 3:09 pm
மூலப்பொருட்கள் விலை உயர்வு: டயர் ரீட்ரேடிங் கட்டணத்தை உயர்த்த முடிவு
<p><strong>மூலப்பொருட்கள் விலை உயர்வு: டயர் ரீட்ரேடிங் கட்டணத்தை உயர்த்த முடிவு</strong></p> <p>நாமக்கல், பிப்.19- ரப்பர் உள்ளிட்ட மூலப்பொருட் களின் விலை கடுமையாக உயர்ந் துள்ளதால், டயர் ரீட்ரேடிங் கட்ட ணத்தை உயர்த்த நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கே.கே. வளாகத்தில் புத னன்று இக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்தி ரன் தலைமை தாங்கினார். இக்கூட் டத்தில் டயர் ரீட்ரேடிங் தொழிலைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட் டது. குறிப்பாக, டயர் ரீட்ரேடிங் கிற்கு தேவையான ரப்பர் உள் ளிட்ட மூலப்பொருட்களின் விலையை உற்பத்தி நிறுவனங் கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. இது தொழில் நடத்துபவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள் ளது. ஒன்றிய அரசின் அதிக எடை ஏற்றும் அனுமதி (Overloading Permission) மற்றும் லாரி உரிமை யாளர்கள் சந்திக்கும் பல்வேறு &nbsp;சிக்கல்களால் கனரக போக்குவரத் துத்துறை மந்தமடைந்துள்ளது. லாரிகளுக்குச் சரியான சரக்கு (லோடு) கிடைக்காத காரணத் தால், டயர்களைப் பயன்படுத்தும் அளவு குறைந்து, ரீட்ரேடிங் செய் யும் டயர்களின் வரத்து கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலை யில், தற்போதைய இக்கட்டான சூழ லில் தொழிலை தக்கவைக்க கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. &ldquo;ரப்பர் நிறுவனங்களின் தொடர் விலை உயர்வால், ஒரு செட் (இரண்டு டயர்கள்) ரீட்ரேடிங் செய்ய தற் போதுள்ள கட்டணத்தை விட ரூ. 1000 முதல் ரூ. 1500 வரை &nbsp;உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது,&rdquo; என கூட்டத்தில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், நாமக்கல் பகுதியில் இந்த தொழிலை நம்பி நேரடியா கவும், மறைமுகமாகவும் 10 &nbsp;ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. மூலப் பொருட்களின் விலை இதேபோல் உயர்ந்து கொண்டே சென்றால், இந்த தொழிலாளர்களின் வாழ் வாதாரம் கேள்விக்குறியாகும். இத் தொழில் நலிவடையாமல் பாது காக்கவும், தொழிலாளர்களின் நலன் கருதியும், இந்த தவிர்க்க முடி யாத கட்டண உயர்வை லாரி உரி மையாளர்கள் புரிந்துகொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண் டும் என சங்கத்தின் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் &nbsp;நாமக்கல் தாலுகாவை சேர்ந்த நூற் றுக்கணக்கான ரீட்ரேடிங் உரிமை யாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் மல்லீஸ்வரன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.