தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விலா எலும்பை முறிக்கும் விலைவாசி! - கே. அர்ஜுனன்

1 Nov 2026, 10:10 pm
விலா எலும்பை முறிக்கும் விலைவாசி! - கே. அர்ஜுனன்

விலா எலும்பை முறிக்கும் விலைவாசி! - கே. அர்ஜுனன்

நாட்டில் உயர்ந்திருப்பது கிராமவாசியும் அல்ல, நகரவாசியும் அல்ல; விலைவாசிதான்! கிராமம், நகரம், பெருநகரம் என்ற வேறுபாடின்றி எங்கும் நீக்கமற வானளாவ நிற்கிறது விலைவாசி. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களின்

உலகப் போர்களும் உள்நாட்டுச் சுமையும்

சர்வதேச, தேசிய, மாநில அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளே விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ரஷ்யா–உக்ரைன் போர், மூன்றாண்டுகளாகப் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல், கடந்த ஆறு மாதங்களாக ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்–அமெரிக்கக் கூட்டணி நடத்தும் போர், எண்ணெய் உட்பட உலக வர்த்தகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் துடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதிக்க வெறி ஆகியவற்றால் கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதைச் சார்ந்த பல பொருட்களின் விலையும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது.

அதே கச்சா எண்ணெய், கூடுதல் விலை

இந்தியாவிலோ, 2014இல் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் எல்லாமே ஏறுமுகம்தான். எண்ணெய் விலையே இதற்குச் சாட்சி. 2014இல் சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 112 டாலர். அப்போது இந்தியாவில் பெட்ரோல் லிட்டர் ₹71.41, டீசல் ₹59.17, சமையல் எரிவாயு சிலிண்டர் ₹414, வணிக சிலிண்டர் ₹1,129. 2026 அக்டோபர் இறுதியில் கச்சா எண்ணெய் 110.46 டாலர். ஆனால் இந்தியாவில் பெட்ரோல் ₹107.76, டீசல் ₹99.55, சமையல் சிலிண்டர் ₹957, வணிக சிலிண்டர் ₹2,983. இடைப்பட்ட 12 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை சில முறை ஏறி, பலமுறை இறங்கியது; ஆனால் இங்கே விலை இறங்கவே இல்லை.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதெல்லாம் விலையை உயர்த்திய மோடி அரசு, குறைந்தபோது குறைக்கவில்லை; மாறாக வரி மேல் வரி போட்டு வாரிச் சுருட்டியது. 2014இல் இருந்த அதே விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தும், பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ₹36 முதல் ₹40 வரை கூடுதல் விலையில் விற்கப்படுகிறது. ஒவ்வொரு லிட்டரிலும் மக்களிடம் இவ்வளவு தொகையை ஒன்றிய அரசு சுரண்டுகிறது.

சுங்கக் கட்டணமும் ஜிஎஸ்டியும்

நான்கு, ஆறு, எட்டு வழிச் சாலைகளால் போக்குவரத்து எளிதாகியுள்ளது. ஆனால் வழியெங்கும் சுங்கச்சாவடிகள் அமைத்து நவீனக் கொள்ளை நடக்கிறது. 2014இல் ஒரு சுங்கச்சாவடியைக் கடக்கச் சரக்கு லாரிக்கு ₹120 ஆக இருந்த கட்டணம் இன்று ₹400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சுமையும் இறுதியில் சரக்குகளின் விலையாக மக்கள் தலையிலேயே விழுகிறது.

2017 ஜூலை 1 முதல் அமலான ஜிஎஸ்டி, தொடக்கத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்படவில்லை. இன்று அரிசி, கோதுமை, பருப்பு, மாவு, தயிர், சர்க்கரை, சமையல் எண்ணெய், தேயிலை, காபித் தூள், உலர் திராட்சை, முந்திரி என அன்றாட உணவுப் பொருட்கள் மீது 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எரிபொருள் விலை, சுங்கக் கட்டணம், ஜிஎஸ்டி என்ற மோடி அரசின் மும்முனைத் தாக்குதலால் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நிலைமை

முந்தைய திமுக ஆட்சியில் மின் கட்டணமும் சொத்து வரியும் கடுமையாக உயர்த்தப்பட்டதால் சிறு, குறு தொழில்முனைவோரும் சில்லறை வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதே நிலை தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. பருவமழை பொய்த்ததால் நெல் உற்பத்தி குறைந்ததைக் காரணமாக்கி, கள்ளச்சந்தைப் பேர்வழிகள் அரிசியைப் பதுக்கி விலையைச் செயற்கையாக உயர்த்துகின்றனர். அரிசி, சர்க்கரை, எண்ணெய், எரிவாயு விலை உயர்வால் உணவகங்களில் டீ, காபி, வடை, இட்லி, தோசை, பொங்கல் விலை கடந்த மூன்று மாதங்களில் சராசரியாக 25 சதவீதம் உயர்ந்துவிட்டது. அரிசி, எண்ணெய், இட்லி, காபி விலையேற்றத்தைக் நையாண்டி செய்து 40 ஆண்டுகளுக்கு முன் வந்த திரைப்படப் பாடல் இன்றும் அப்படியே பொருந்துகிறது.

கோடீஸ்வரர்களுக்கு வளர்ச்சி

வளர்ச்சி என்று வாய்கிழியப் பேசும் மோடி ஆட்சியில் புதிய கோடீஸ்வரர்கள் பெருகியுள்ளனர்; அம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்றோர் பெருங்கோடீஸ்வரர்களாகியுள்ளனர். ஆனால் கையில் வாங்கிய கூலி எங்கே போனது என்றே தெரியாமல் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்கள் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணமான ஒன்றிய அரசு குறித்து வாய் திறக்காமல், தமிழக அரசை மட்டும் திமுகவும் அதிமுகவும் விமர்சிப்பது நியாயமாகாது. அதேபோல், அனைத்தையும் மாற்றப் போவதாக ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள், கடந்த திமுக ஆட்சியை மட்டும் குறை சொல்வதை விடுத்து, விலைவாசியைக் கட்டுப்படுத்தச் செயலில் இறங்க வேண்டும். கள்ளச்சந்தையையும் பதுக்கலையும் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.