எகிறும் பணவீக்கம்; எட்டாக்கனியாகும் உணவு!
13 May 2026, 9:11 pm

எகிறும் பணவீக்கம்; எட்டாக்கனியாகும் உணவு!

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், விலைவாசியைக் கட்டுப் படுத்துவதில் நிலவும் மெத்தனமும் சாமானிய மக்களை மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்தி யுள்ளன. ஏப்ரல் 2026-க்கான சில்லரைப் பண வீக்கம் 3.5 சதவீதமாக உயர்ந்து, கடந்த 13 மாதங் களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 3.4 சதவீதமாக இருந்த இந்த உயர்வு, தற்போதைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் தோல்வியையே அப்பட்டமாகப் பறை சாற்றுகிறது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் இந்தப் பணவீக்க உயர்வுக்கு மிக முக்கியக் காரணமாகும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் உணவு மற்றும் பானங்கள் பிரிவில் பணவீக்கம் 4 சதவீதமாக எகிறியுள்ளது. கிராமப்புறப் பண வீக்கம் 3.74 சதவீதமாக உயர்ந்து 15 மாத கால உச்சத்தைத் தொட்டுள்ளது, இது கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைத்து வருகிறது.

வெளியே சென்று உணவருந்துவது என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு இனி எட்டாக் கனியாகிவிடும் சூழல் உருவாகியுள்ளது. உண வகங்கள் மற்றும் தங்குமிடச் சேவைகளுக்கான பணவீக்கம் 4.2 சதவீதமாகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

வர்த்தக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்வையும், எரிபொருள் கட்டண உயர்வையும் உணவகங்கள் வாடிக்கையாளர் கள் மீது சுமத்துவதே இதற்கு முதன்மைக் காரணமாகும். ஒருபுறம் எரிபொருள் தேவையைக் குறைக்கச் சொல்லும் பிரதமர், மறுபுறம் அந்த எரிபொருள் விலையேற்றத்தால் விளையும் பாதிப்புகளை மக்கள் மீதே சுமத்தி வேடிக்கை பார்க்கிறார். சரக்கு போக்குவரத்து செலவுகள் 7.6 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் அன்றாடத் தேவையான உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது தற்செயலானதல்ல, இது அரசின் திட்டமிட்ட பொருளாதாரக் குற்றமாகும்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய ரிசர்வ் வங்கி மற்றும் ஒன்றிய அரசு, வட்டி விகி தங்களை உயர்த்தத் திட்டமிடுவது நடுத்தர வர்க்கத்தின் வீட்டுக் கடன் உள்ளிட்ட இதரச் செலவுகளை மேலும் அதிகரிக்கும். தனது கார்ப்பரேட் நண்பர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வரிச் சலுகைகளை வாரி வழங்கும் இந்த அரசு, சாமானிய மக்களின் தட்டில் இருக்கும் உணவின் விலையைக் குறைக்க எந்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ள நிலையில், அதன் பாதிப்பிலிருந்து மக்க ளைப் பாதுகாக்கத் தவறிய இந்த அரசு, புள்ளி விவரங்களை மறைப்பதிலேயே காலத்தைக் கடத்துகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தின் அடிப்ப டை பணவீக்க விகிதம் (Core Inflation) 3.7 சத வீதமாக மாற்றமின்றித் தொடர்வது, விலை வாசி உயர்வு என்பது தற்காலிகமானதல்ல, அது நிரந்தரமான ஒன்றாக மாறிவிட்டதைக் காட்டுகிறது. நிர்வாகத் திறனற்ற இந்த அரசின் மக்கள் விரோதப் போக்கினை ஜனநாயக, முற் போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து வீரியத்துடன் அம்பலப்படுத்த வேண்டும்.