உயரும் பஞ்சு விலை; தடுமாறும் ஜவுளித்துறை
11 May 2026, 12:20 am

உயரும் பஞ்சு விலை; தடுமாறும் ஜவுளித்துறை

ஜவுளித்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவது 5 மாநில தேர்தல் அதன் பரபரப்பிற்கு இடையே கவனம் பெறவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் பஞ் சின் விலை தொடர்ந்து உயர்ந்து வரு கிறது.

ஒரு கண்டி (355 கிலோ) விலை 54,500 ருபாய் என்ற அளவில் பிப்ரவரி மாதம் விற்ற பஞ்சு இன்றைய தேதி யில் 69,000 ரூபாய் என்ற அளவினை எட்டியுள்ளது.

இந்த விலை ஏற்றம் தொடரும் என்கின்ற நிலையே தற்சம யம் உள்ளது.

இந்தியாவின் பஞ்சு உற் பத்தி ஆண்டொன்றிற்கு 330 லட்சம் பேல் (1 பேல் - 170 கிலோ) இந்த வரு டம் 280 லட்சம் பேலாக மதிப்பீடு செய் யப்பட்டுள்ளது, காரணம் பருத்தி உற் பத்தி செய்யும் சில பிரதான மாநிலங்க ளில் பருத்தி பயிரிடுவது பெருமளவு குறைந்துள்ளது

. ஆனால், இது மட்டும் காரணம் அல்ல.

உலகளவில் பருத்தி உற்பத்தி செய் யும் பிரதான நாடுகளான அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, ஆப்பி ரிக்கா நாடுகளில் சிலவற்றின் உற்பத்தி ஒரு ஹெக்டார்க்கு 800 கிலோ.

ஆனால் இந்தியாவின் உற்பத்தி ஒரு ஹெக்ட ருக்கு 400 முதல் 450 கிலோ. இது தவிர மற்ற நாடுகளை காட்டிலும் இங்கு உற் பத்தி செலவு இரு மடங்கு அதிகம்.

விதையின் தரத்திலும், பருத்தியின் தரத்திலும் இந்தியா மிகவும் பின் தங்கி யுள்ளது..

தூய பருத்தி உற்பத்தி என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

ஏன் தற்போதைய விலை உயர்வு? பருத்தி நேரடியாக விவசாயிகளிடம் வர்த்தகர்கள் கொள்முதல் செய்கின்ற னர்.

ஜின்னிங் செய்து பின்னர் அதை நூற்பாலைகளுக்கு விற்கின்றனர்.

காட் டன் கார்பொரேஷன் ஆப் இந்தியா என் கின்ற ஒன்றிய அரசின் சார்பு நிறுவனம் வாயிலாகவும் பருத்தி பெருமளவு கொள்முதல் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு மட்டுமே 100 லட்சம் பேல் இந்த நிறுவனத்தால் வாங் கப்பட்டு சந்தையில் விற்கப்படுகிறது, இந்த நிறுவனம் ஏற்படுத்தப்பட்டதின் நோக்கமே விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்க வேண்டும், அதே சம யம் நூற்பாலைகளுக்கும் சரியான விலையில் சென்று சேரவேண்டும் என் பதே.

ஆனால் கடந்த சில மாதங்களாக டிரேடர்ஸ் அதிகளவு இவர்களிடம் பஞ் சினை வாங்கி குவித்துள்ளனர்.

கடத்த வாரத்தில் மட்டுமே 4 நாட்களில் 4200 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு வரை பெரும் நூற்பாலை குழுமங்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு தேவை யான பஞ்சினை வாங்கும் நிலை எல் லாம் தற்போது இல்லை.

நிதியளவு வலு வாக உள்ள நூற்பாலைகள் கூட அதிக பட்சம் 3 - 4 மாதங்களுக்கான பஞ்சினை மட்டுமே வாங்கக்கூடிய சூழல் உள் ளது.

சிறு ஆலைகள் அதிகபட்சம் 2 மாத கால அளவு தேவையை வாங்குகின்ற னர்.

கோவிட் தொற்றுற்கு பின்னர் சற்றே உயிர்பிடித்த ஜவுளித்தொழில் அமெரிக்கா வரி விதிப்பின் காரண மாக கடும் பின்னடைவை சந்தித்தது.

இந்த கால கட்டத்தில் துணி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களை காட்டி லும் நூற்பாலைகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

உற்பத்தியை நிறுத்த இயலாது, அதே சமயம் விற்பனை மிக குறைவு.

உற்பத்தி செய்த நூலை வைக்க இடம் இல்லாமல் வாடகைக்கு இடம் எடுத்து வைக்க வேண்டிய சூழல் நிலவியது.

பெரியளவில் தள்ளுபடி அதாவது கிலோ ஒன்றிற்கு 15 முதல் 25 ரூபாய் வரை குறைத்து கொடுத்த தும், கடன் காலத்தை 90 நாட்கள் வரை நீடித்து வர்த்தகத்தை கடும் சிரமத் திற்கு இடையே முன்னெடுத்தனர்.

தற்சமயம் சீனா பெருமளவில் இந்திய நூலை இறக்குமதி செய்ய துவங்கியுள்ளது.

இந்திய சந்தைகளில் கிடைக்கக்கூடிய விலையை காட்டிலும் சற்றே அதிக விலை மற்றும் பணம் பெற்றபின் தான் சரக்குக்குள் டெலிவரி செய்யப்படும் நிலை காரணமாக பெரும்பாலான நூற்பாலைகள் ஏற்று மதியை பிரதானமாக சார்ந்து உள்ள னர். ஏனெனில் கடந்த 1 வருட காலமாக ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய அவர்க ளுக்கு இது ஒரு வாய்ப்பு.

அவர்களும் முதலீட்டிற்கு ஏற்ப லாபம் ஈட்ட வேண் டிய தேவை உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் 10 லட்சம் ஸ்பிண்டில் முற்றிலும் உற்பத்தி நிறுத் தப்பட்டு ஆலைகள் மூடப்பட்டுள் ளது.

உற்பத்தி செலவு, ஆட்கள் பற் றாக்குறை, தரமான பஞ்சு கிடைப்ப தில் சிக்கல், கால சூழலுக்கு ஏற்ப நூற் பாலைகள் இயந்திர கட்டமைப்பை செய்ய இயலாமல் போனது , தொடர்ந்து ஏற்பட்ட விற்பனை ஏற்ற தாழ்வுகள்.

எல்லாவற்றிக்கும் மேலாக அரசின் பாராமுகமும், கொள்கைக ளும்.

ஆடை உற்பத்தி நிலை எப்படி இருக் கிறது? 10 ஆண்டு கால போராட்டம், கோவிட் தொற்றுகள், அதன் பின் வளர்ந்த பொருளாதார நாடுகளின் பொருளாதார மந்த நிலை, ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கா வரி விதிப்பு, ஈரான் - இஸ்ரேல் போர், என ஏற்றுமதிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் ஒரு புறம், வங்கதேச துணி மற்றும் ஆடை இறக்குமதி இந்திய உள்நாட்டு உற்பத்தியாளர்களை கடுமையாக பாதித்து வருவது என பல்வேறு சோத னைகளை சந்தித்து.

இந்த சூழலில் தற்போதய ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக செயற்கை நூலிழை சார்ந்த பொருட்களின் விலை ஏற்றம், சாயம் மற்றும் ரசாயனங்களின் விலை ஏற்றம், எரிபொருள் விலையேற் றம் மற்றும் பற்றாக்குறை, கப்பல் மற் றும் விமான சரக்கு போக்குவரத்து கட்ட ணங்கள் அபரிதமாக உயர்ந்த நிலை.

இவற்றுடன் தற்சமயம் கடுமையாக உயரும் பருத்தி நூல் விலை மற்றும் தேவையான அளவு தேவையான நேரத்தில் நூல் கிடைப்பதில் ஏற்பட் டுள்ள பெரும் சிக்கல் ஆகியவற்றால் உள்ளபடியே ஆடைகளின் விலையில் 20% அளவு உயர்ந்துள்ளது.

ஆனால் இறக்குமதியாளர்களோ, உள்நாட்டு வர்த்தகர்களோ இந்த விலை ஏற்றத்தை ஏற்கவில்லை. இந்த சூழல் இந்த துறையை நிலை குலைய செல்லும் அளவிற்கு கொண்டு செல்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆடை உற்பத்தி பாதிப்பு என்பது அந்த நிறுவனத்தை மட்டும் பாதிக்காது, அதை சார்ந்து உள்ள பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்.

ஒரு புறம் ஐரோப்பா, இங்கி லாந்து, ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகளுடன் வரி இல்லா வர்த்தக ஒப் பந்தங்களை கையெழுத்திட்டுள் ளோம்.

அதனால் பல மடங்கு உயர இருக்கும் வர்த்தகத்தை கையாள அடிப்படை கட்டமைப்புகளை வலுப்ப டுத்தும் தேவை உள்ளது.

ஆனால் தற் போதைய நிலை நீடித்தால் பெருமளவு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தங்க ளின் ஆலைகளை ஒரு கட்டத்தில் மூடக் கூடிய அபாயம் உள்ளது.

ஆடை உற்பத்தி சங்கிலியில் நூற் பாலைகள் முதல் தயாரான ஆடை களை உரிய இடங்களுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து நிறுவனங் கள் வரை அனைவரும் அங்கம் என்ற வகையில் இந்த பிரச்சனையை அணுக வேண்டும்.

ஒன்றிய அரசு உடனடியாக தலை யிட்டு காட்டன் கார்பொரேஷன் ஆப் இந்தியாவின் விற்பனை நேரடியாக நூற்பாலைகளுக்கு மட்டுமே என்பதை உறுதிப்படுத்துவதோடு, தற்சமயம் கொள்முதல் விதிமுறைகளை தளர்த்தி நூற்பாலைகள் இலகுவாக வாங்குவதற்கு வழி செய்ய வேண்டும்.

மிக குறைந்த வட்டியில் நூற்பாலை களுக்கு பஞ்சினை வழங்க வேண்டும்.

இறக்குமதி மீதான 11% வரியினை குறைந்தது அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீக்க வேண்டும்.

நிச்சயமாக இத னால் உள்நாட்டு வேளாண் துறை பாதிக் கப்படாது. ஏனெனில் நமது தேவை என பது உற்பத்தியை காட்டிலும் 20 % அதி கம்.

இது வரும் ஆண்டுகளில் இன் னும் உயரும். போர்க்கால அடிப்படையில் இதனை ஒன்றிய அரசு செய்யவேண் டும், அதே சமயத்தில் கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்ட நேஷனல் காட்டன் மிஷன் திட்டத் திற்கு 5400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கு இரு தினங்களுக்கு முன் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது வரவேற்கத்தக்கது.

ஏனெனில் இதன் வாயிலாக மேலே குறிப்பிட்ட பருத்தி உற்பத்தியில் உள்ள அனைத்து குறைபாடுகளும் சரி செய்யப்பட்டு, அடுத்து வரும் 5 ஆண்டுகளில் உயர்ந்த உற்பத்தி, தரம், குறைந்த செல வீனம் என்கின்ற சர்வதேச நிலையை எட்ட முடியும்.

2030 ஆம் ஆண்டு இந்திய ஆடை உற்பத்தியை 40 பில்லியன் டாலர் என்கின்ற நிலைக்கு உயர்த்துவோம் என்கின்ற பிரதமரின் கனவை மெய்ப் பிக்க ஜவுளித்துறை தயாராக உள்ளது அதற்கு வலு சேர்க்க ஒன்றிய அரசு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

இல்லையெனில் கனவு கனவா கவே இருக்கும் என்பதே நிதர்சனம்.

பல்வேறு கருத்துகேட்பு கூட்டங் களை காணொளி மற்றும் நேரடியாக வும் அரசின் வர்த்தகம், ஜவுளி, நிதி, திறன் மேம்பாடு, சிறு, குறு நடுத்தர அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர், தொழில் துறை வைக்கும் கருத்துக்களை கவ னத்துடன் உள்வாங்குகின்றனர், நல்ல தீர்வுகளை கொடுப்பார்கள் என்ற எதிர் பார்ப்புடன் தொழில் துறையினர் நம்பிக் கையுடன் காத்திருக்கின்றனர்.

- குமார் துரைசாமி, இணைச் செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.