வழிபாட்டு உரிமை மதச் சலுகை அல்ல, அடிப்படை உரிமை: நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்
9 Aug 2026, 10:50 pm

வழிபாட்டு உரிமை மதச் சலுகை அல்ல, அடிப்படை உரிமை: நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்

சென்னை, ஆக.9: சென்னையில் நடைபெற்ற மனுராஜ் சண்முகசுந்தரம் எழுதிய ‘தி பீப்பிள்ஸ் சாங்ட்டம்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், வழிபாட்டு உரிமை என்பது மதச் சலுகை அல்ல, மாறாக ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என வலியுறுத்தினார்.

சமூகத்தை மலரச் செய்வதில் வழிபாட்டுத் தலங்கள் ஆற்றிய பங்கு மற்றும் சுயமரியாதை இயக்கங்களின் முக்கியத்துவத்தை இந்நூல் விளக்குவதாக அவர் பாராட்டினார். பிறப்பு அல்லது அடையாளத்தின் காரணமாக ஒரு மனிதனை இறைவனை வழிபடுவதிலிருந்து தடுப்பது அவனது அடிப்படை மனிதக் கண்ணியத்தைப் பறிப்பதற்குச் சமம் எனக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்புச் சட்டத்தின் 17-ஆவது பிரிவு தீண்டாமையை ஒழிப்பதைக் குறிப்பதாலேயே கோவில்கள் அனைவருக்கும் திறக்கப்படுகின்றன என்றார்.