விண்ணை முட்டுவதால் கண்ணைக் கட்டுகிறது
15 Oct 2026, 9:10 pm

விண்ணை முட்டுவதால் கண்ணைக் கட்டுகிறது

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அச்சமூட்டுவதாக உள்ளது.தொடர்ச்சியாக பண்டிகைகள் வரவுள்ள நிலையில், விலைவாசி மேலும் உயரும் என்று வெளியாகும் அபாய அறிவிப்புகள் ஏழை, எளிய மக்களை மட்டுமின்றி, நடுத்தர மக்களையும் அச்சுறுத்துவதாக உள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரிசி கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்து கிலோ அரிசிரூ.80 வரை உயர்ந்துள்ளது. சில இடங்களில் சன்னரக அரிசி கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலை40 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. புளி, காய்கறி என அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்துபொறுப்பில் உள்ள அமைச்சர்கள் ஆளுக்கொரு காரணத்தை அவ்வப்போது கூறி வருகின்றனர். உணவுத்துறை அமைச்சர் முதலில்விலைவாசி உயரவே இல்லை சாதித்தார். இப்பொழுது அரிசி விலை உயர்வுக்கான காரணங்களை அடுக்குகிறார். ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதுஎன்றும், அரிசி பதுக்கல்தான் விலை உயர்வுக்கு காரணம் என்றும் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருவது குறித்து நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளனர். குறிப்பாக சீரற்ற பருவமழை முக்கிய காரணமாக உள்ளது. நிலத்தடி நீர் அபாயகரமான அளவுக்கு குறைந்துள்ளது. கர்நாடகத்திலிருந்து உரிய காலத்தில் காவிரிநீர் திறக்கப்படாததால் டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி மட்டுமின்றி சம்பா சாகுபடியும்பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் கடைமடைப் பகுதியை இன்னமும் கூட சென்று சேராத நிலையில், நீர்வரத்து இன்மையால், அணையிலிருந்து நீர்த்திறப்பும் குறைக்கப்படுகிறது. அரிசி தேவைக்கு அண்டை மாநிலங்களை முற்றாகச் சார்ந்திருக்கும் நிலை நெற்களஞ்சியத்திற்கு நேர்ந்த பேரவலமாகும்.

இப்போதாவது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் அளவை அதிகரிக்கவேண்டும். தமிழகத்தின் நெல் உற்பத்தியை அதிகரிக்க நீண்டகால தொலை நோக்கு திட்டங்கள் அவசியம். மறுபுறத்தில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு அநியாய வரி விதிக்கும் ஒன்றிய அரசும் முக்கியக் காரணமாகும். அதுமட்டுமின்றி, ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்குப் போக்குவரத்து கட்டணம் உயர்வு, டோல்கேட் கட்டணம்தொடர்ச்சியாக உயர்த்தப்படுவது போன்ற பல்வேறு காரணங்கள் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கின்றன. ஒன்றிய அரசும்,மாநில அரசும் விலைவாசியை குறைக்க தற்காலிக மற்றும் நிரந்தரத் திட்டங்களை உடனடியாக வகுக்க வேண்டும்.