தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

4 மாதத்தில் ரூ. 600 வரை உயர்வு ஆகாயத்தை நோக்கிப் பறக்கும் அரிசி விலை! ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் கடும் பாதிப்பு

7 Oct 2026, 11:17 pm
4 மாதத்தில் ரூ. 600 வரை உயர்வு ஆகாயத்தை நோக்கிப் பறக்கும் அரிசி விலை! ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் கடும் பாதிப்பு

4 மாதத்தில் ரூ. 600 வரை உயர்வு ஆகாயத்தை நோக்கிப் பறக்கும் அரிசி விலை! ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் கடும் பாதிப்பு

சென்னை, அக். 7 -அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும், ரகத்துக்கு ஏற்ப 26 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை அரிசியின் விலை ரூ. 400 முதல் ரூ. 600 வரை உயர்ந்துள்ளது.அரிசி விலை கடந்த நான்கு மாதங்களில் நான்காவது முறையாக உயர்ந்து, மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.ரூ. 1,400-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு மூட்டை டீலக்ஸ் பொன்னி அரிசி, தற்போது ரூ. 1,800-க்கு விற்பனையாகிறது. ரூ. 1,600-க்கு விற்கப்பட்ட பொன்னிஅரிசி மூட்டை ரூ. 1,950-ஐத் தொட்டுள்ளது. ரூ. 1,900-க்கு விற்கப்பட்ட வெள்ளை பொன்னி அரிசி மூட்டை ரூ. 2,300க்கு உயர்ந்துள்ளது.

எளிய மக்களின் அன்றாட உணவான இட்லி அரிசியும் இந்த விலை உயர்விலிருந்து தப்பவில்லை. ரூ. 900-க்கு விற்பனை செய்யப்பட்ட மூட்டை, தற்போது ரூ.1,200 ஆக உயர்ந்துள்ளது. ரூ. 1,500-க்கு விற்றுவந்த பச்சரிசி, ரூ. 1,800 ஆக உயர்ந்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட சிவாஜி பொன்னி அரிசி மூட்டையின் விலை ரூ. 1,800-லிருந்து ரூ. 2,400 ஆக உயர்ந்து, விலை அதிகரித்த ரகங்களிலேயே உச்சத்தைத் தொட்டுள்ளது.

விலை மேலும் உயரும் ஆபத்து

விலை உயர்வு இத்துடன் நிற்கப் போவதில்லை என்பதே சந்தை வட்டாரங்களின் எச்சரிக்கையாக உள்ளது. அரிசிஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாகவே ஒருகிலோ அரிசியின் விலை ரூ.100-ஐத் தாண்டக்கூடும் என்கின்றனர்.ஏற்கெனவே எண்ணெய், பருப்பு, சர்க்கரை, தக்காளி, வெங்காயம், கேரட், சின்ன வெங்காயம் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. நல்லெண்ணெய் விலை ரூ. 30 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

“ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்”

பெ. சண்முகம் விமர்சனம்

அரிசி விலை உயர்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்தப் பொருளை எடுத்தாலும் கடந்த சில மாதங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அரிசி விலை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு அளவில் ஏறிக்கொண்டே இருக்கிறது. 25 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த மாதம் ரூ. 1,800 ஆக இருந்தது. இந்த மாதம் என்ன விலையோ, எவ்வளவு உயரப்போகிறதோ தெரியாது. அரிசி விலை ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறது என்பது மட்டும் உறுதி. ஆனால், ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டவில்லை போலும்” என அவர் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.