தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரிசி, மளிகை விலை உயர்வும்; நடுத்தர, ஏழை மக்களின் துயரமும் - மு. மோகனவள்ளி

7 Oct 2026, 9:10 pm
அரிசி, மளிகை விலை உயர்வும்;  நடுத்தர, ஏழை மக்களின் துயரமும் - மு. மோகனவள்ளி

அரிசி, மளிகை விலை உயர்வும்; நடுத்தர, ஏழை மக்களின் துயரமும் - மு. மோகனவள்ளி

ஒரு குடும்பத்தின் பொருளா தார நிலையைப் புரிந்து கொள்ள பெரிய பொருளாதாரக் குறியீடுகளை மட்டுமே பார்க்கவேண்டிய தில்லை. சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியை வைத்தும், அரிசி,சீனி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களின் அளவைப் பார்த்தாலே குடும்பத்தின் உண்மையான பொருளாதார நிலை தெரிந்துவிடும். அதிலும் குறிப்பாக நடுத்தரக்குடும்பங்கள் இன்று ஒரு விசித்திரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். முழுமையான ஏழைகளின் நலத்திட்டங்களின்பலனையும் பெற முடியாமல், வசதியான வாழ்க்கை இல்லாமல் வாழ்ந்து வருவதால், சந்தை விலையை முழுமையாகச் சமாளிக்கும் அளவுக்குவருமானம் இல்லாமல் அல்லாடும் நிலையில் இருந்து வருகின்றனர். இதனால் சாமானியர்களும் நடுத்தரவர்க்கத்தினரும் வருமானம் இருந்தும் சேமிப்பு இல்லை என்ற நிலையைதங்கள் வாழ்க்கையாக மாற்றி வாழ்ந்து வருகின்றனர்.

விலைவாசி உயர்வின் உண்மையான முகம்

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறையின் விலைக் கண்காணிப்பு தரவுகளின் படி, 2026 செப்டம்பர் 4 அன்று நாடு முழுவதும் சராசரி சில்லறை விலையில் ஒரு கிலோ அரிசி ரூ. 45.39 என்ற விலையிலும், ஒரு கிலோ சீனி ரூ. 61.93 ஆகவும் இருந்தது. பருப்புவகைகளில் துவரம் பருப்பு ரூ. 124-க்கு மேல் இருந்தது. அரிசி விலையானது கடந்த நாட்களைக் காட்டிலும் உயர்ந்துள்ளதுடன், மொத்த விலையிலும் இதே காலத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் அகில இந்திய அளவில் பொதுவானசராசரி விலைகள் ஆகும். ஒவ்வொரு மாநிலம், மாவட்டத்திற்கேற்ப தரம், ரகம், கடை ஆகியவற்றைப் பொறுத்துநுகர்வோர் செலுத்தும் உண்மையான விலை மாறுபட்டு வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் விலைக்கும் சந்தை யில் நுகர்வோர் வாங்கும் அரிசி விலைக்கும் இடையே உள்ள பெரியலாபஇடைவெளியைத் துல்லியமாகப் பட்டியலிட்டு மக்க ளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

சமையலறையில் தொடங்கும் பொருளாதார நெருக்கடி

4-5 நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் மாதத்திற்கு 25-30 கிலோ அரிசி பயன்படுத்தப்படும் நிலைஉள்ளது. அதனுடன் சீனி, பருப்பு, எண்ணெய், காய்கறி, பால் போன்றபொருட்களின் செலவும் சேர்கிறது. அரிசி மற்றும் மளிகை விலையானது சில ரூபாய்கள் மட்டும்தான் உயர்வதாக இயல்பாகத் தோன்றும்.ஆனால், கூடுதல் நபர்கள் வாழும் குடும்பங்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு அந்த உயர்வானது ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாயாக மாறுகிறது. இதன் விளைவாகச் சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களதுஇயல்பான உணவு நுகர்வைச் சுருக்குதல் மற்றும் உணவு தவிர்த்த பிறசெலவுகளைத் தள்ளிப்போடுதல் போன்றவற்றைச் செய்துவருகின்ற னர். இத்தகைய போக்கானது, உண வில்சிக்கனத்தைக் காட்டுவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட இட்டுச்செல்கிறது.

சீனி, வெல்லம் விலை உயர்வு: சிறிய பொருள், பெரிய தாக்கம்

சீனி என்பது ஒரு குடும்பத்தின் மொத்த செலவில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் பொருள் அல்ல. ஆனால் தேநீர்,காபி, இனிப்பு, பண்டிகை உணவுகள், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் என அன்றாட வாழ்க்கையின்முக்கிய அங்கமாக இருக்கிறது. 2026 செப்டம்பரில் சீனி விலை கிலோ ரூ. 61.93 என அரசின்கண்காணிப்பு அமைப்பு பதிவுசெய்துள்ளது. மேலும் இந்த விலையானது கடந்த ஆண்டைவிட கூடுதலாக ஏறியுள்ளது. தேநீர் கடைகளில் சீனி மற்றும்வெல்லம் விலை உயர்வு காரணமாக தேநீர், காபி போன்ற அத்தியாவசியப் பானங்களின் விலையும் கூடியுள்ளநிலை ஏற்பட்டு மக்களுக்குச் சிரமங் களை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை, நடுத்தர மக்களின் பிரச்சனையும் புள்ளிவிபரங்களும்

நடுத்தரக் குடும்பத்தின் மிகப்பெரிய பிரச்சனை அளவான வருமானம் என்ற நிலை மட்டுமல்ல; வருமானத்திற்கும் செலவிற்கும் இடையே உள்ள இடைவெளி சுருங்கிக் கொண்டிருப்பதுதான். 2026 மார்ச் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டு தரவின்படி இந்தியாவின் பொதுவான பணவீக்கம் 3.40 சதவீதமாக இருந்தது. உணவுப் பணவீக்கம் 3.87 சதவீதமாக இருந்தது. கிராமப்புற உணவுப் பணவீக்கம் 3.96 சதவீதமாகவும், நகர்ப்புறத்தில் 3.71 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. குடும்பத்தின் பார்வையில் பொதுவான பணவீக்க விகிதம் மட்டும் முழு கதையைச் சொல்லாது. ஏனெனில் ஏழை மற்றும் நடுத்தரக்குடும்பங்களின் வருமானத்தில் உணவுக்குச் செல்கின்ற பங்கு அதிகமாக இருப்பதால், உணவுப் பொருட்களின் விலை உயர்வு அவர்களின் வாழ்க்கைதரத்தை நேரடியாகப் பாதிக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் வாழ்வில் விலைவாசி உயர்வின் தாக்கம்

விலைவாசி உயர்வின் சுமை குடும்பத்தில் உள்ள பெண்களின் தோள்களிலேயே விழுகிறது. மாதவருமானத்திற்குள் குடும்பத்தை நடத்தவேண்டிய பொறுப்பு பெண்களிடம் அதிகமாக இருப்பதால், விலை உயரும்போது அவர்கள் உணவு மற்றும் சமையல் மளிகைப் பொருட்களின் அளவையும் தரத்தையும் குறைக்க வேண்டியகட்டாயம் ஏற்படுகிறது. குடும்பத்தின் உணவுச் செலவு அதிகரிக்கும் போது முதலில் பாதிக்கப்படுவது தரமான உணவு உட்கொள்வதே ஆகும். அதில் பழங்கள், பால், மீன், முட்டை, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றின் பயன்பாடு குறையலாம். இதன் நீண்டகால விளைவானது குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடல்வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அடுத்த தலைமுறையின் மனிதவளத்தைப் பாதிக்கும் பிரச்சனையாக மாறுகிறது.

அரசின் பொறுப்பும் வாழ்வாதாரக் கோரிக்கைகளும்

அரசானது விலைவாசி உயர்வை வெறும் சந்தையின் இயல்பான விளைவு என்று கருதி விலகிநிற்க முடியாது. சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் செயற்கை விலை உயர்வு மற்றும் பதுக்கலைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளிட மிருந்து நியாயமான விலையில் நேரடி கொள்முதலை அதிகரிக்க வேண்டும். ரேஷன் கடைகள் மக்களின் உணவுப்பாதுகாப்புக் கோட்டையாகத் தொட ர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும்.

விலைவாசி தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கும்போதும் உழைக்கும் மக்களின் சம்பளம் அதற்கேற்ப உயரவேண்டும். தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இது மிகப்பெரிய சுமையாக இருப்பதால், அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியம் தற்போதைய விலைவாசி உயர்வை மற்றும் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டுகாலமுறைப்படி உயர்த்திக் கொடுக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு நியாயமான விலை, உழைப்பவருக்கு வாழ்வாதார ஊதியம், நுகர்வோருக்கு நியாயமான விலை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணவுப் பாதுகாப்பு என்ற முக்கிய இலக்குகள் உறுதிப் படுத்தப்பட்டால்தான் மக்கள் விலைவாசி உயர்வின் கிடுக்கிப் பிடியிலிருந்து சற்றேனும் மூச்சுவிட முடியும்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.