மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அதிகாரிகளை நியமிக்க ஆர்ஜிஐ உத்தரவு
9 Dec 2025, 4:25 pm
<p><strong>மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அதிகாரிகளை நியமிக்க ஆர்ஜிஐ உத்தரவு</strong></p>
<p>புதுதில்லி நீண்ட காலத்திற்குப் பிறகு, நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தொ டங்கும் என்று நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு சமீபத்தில் தெரி வித்தது. அதன்படி, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதி க்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பை ஒன்றிய உள்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது. இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெ டுப்பு பணிக்கு அதிகாரிகளை ஜனவரி 15 ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய தலைமைப் பதிவாளர் (ஆர்ஜிஐ - Registrar General of India - RGI) சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,”மக்கள்தொகை கணக்கெ டுப்பு பணிக்கான அதிகாரிகள் நியமனத்தை 2026ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முடிக்க வேண்டும். சுமார் 700 முதல் 800 பேர்களுக்கு ஒரு கணக்கெடுப்பாளருக்குப் பணி ஒதுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு 6 கணக்கெடுப்பாளர்களுக்கும் ஒரு மேற் பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990இன் விதி 3இன் படி, ஆசிரியர்கள், எழுத்தர்கள் அல்லது மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகார சபையின் எந்தவொரு அதி காரியும் கணக்கெடுப்பாளராக நியமிக்கப் படலாம். கணக்கெடுப்பாளரை விட உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே மேற்பார்வையாளராக நியமிக்கப்பட வேண்டும். ஜனவரி 15ஆம் தேதிக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன” என அதில் கூறப்பட்டுள்ளது. </p>
