தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் நவ பாசிசத்தை எதிர் கொள்வதற்கான புரட்சிகரக் கோட்பாடு

2 Dec 2025, 4:11 pm
புதிய சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் நவ பாசிசத்தை எதிர் கொள்வதற்கான புரட்சிகரக் கோட்பாடு

புதிய சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் நவ பாசிசத்தை எதிர் கொள்வதற்கான புரட்சிகரக் கோட்பாடு

(2025 அக்டோபர் 15-17 தேதிகளில் கியூபாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆற்றிய உரையின் பகுதிகள்)

தற்போதைய உலகச் சூழல் மிகவும் சவால் நிறைந்தது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம், அரசியல், சித்தாந்தம், பொரு ளாதாரம் மற்றும் இராணுவம் என அனைத்துத் தளங்களிலும் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தத் தொடர்ந்து காய்களை நகர்த்துகிறது. இஸ்ரேல் நிகழ்த்தி வரும் கோரமான இனப்படு கொலையும், பாலஸ்தீன மக்களின் வாழ்வாதார அழிப்பும், உணவைப் போர்க்கருவியாக மாற்றும் அதன் நடவடிக்கையும் சற்றும் சகித்துக் கொள்ள முடியாதது. இஸ்ரேலின் இத்தகைய அப்பட்டமான மீறல்களுக்கு அமெரிக்கா தீவிரமாக ஆதரவ ளிக்கிறது.

இந்த மோதல் இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லைகளுக்குள் நின்றுவிடாது; இது மேற்கு ஆசியாவில் ஒரு பெரிய பிராந்தியப் பதற்றமாக நிச்சயமாக உருவெடுக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எச்சரித்தது. இன்று அதுவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் அரசு ஒரு சர்வதேச விதிமீறிய - கொடிய அரசாக (Rogue State) மாறி விட்டது. சர்வதேச கடல் எல்லையில் செயல்பாட்டா ளர்களைக் கைது செய்து சித்ரவதை செய்யும் துணிச்சல் கூட அதற்கு வந்துவிட்டது. உக்ரைன் மோதலுக்கும் நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கமே அடிப்படைக் காரணம். இந்த இரண்டு போர்களுக்கும் பின்னாலும் ஒரே முகம்தான் தெரிகிறது; அது ஏகாதிபத்தியத்தின் முகம். கலாச்சார ஆதிக்கமும்  போலி உண்மைகளும் உலகெங்கிலும் வலதுசாரி மற்றும் நவ பாசிச சக்திகள் வளர்ந்து வருகின்றன.

அவை சில நாடு களில் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளன. உலக அரசியல் வலது திருப்பத்தில் செல்வது பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் இந்த வலதுசாரிப் போக்கா னது அரசியலுடன் நின்றுவிடாமல், மக்களின் சிந்தனை செயல்முறையிலும் ஊடுருவி, சித்தாந்த ரீதியாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தோழர் அந்தோனியோ கிராம்ஷி சரியாகச் சொன்னது போல, வர்க்க எதிரிகள் மக்களைக் கட்டுப்படுத்த வெளிப்படையான ஒடுக்குமுறையை மட்டும் பயன்படுத்துவதில்லை; அவர்கள் கலாச்சார மேலாதிக்கத்தை (Cultural Hegemony) பயன்படுத்துகிறார்கள். வலதுசாரி மற்றும் பாசிச சக்திகள், தவறான தகவல்கள், திரித்துக் கூறப்பட்ட புள்ளிவிவரங்கள், போலிப் படங்கள் மற்றும் வெற்றுப் பேச்சுக்கள் மூலம் மக்களின் மூளையைச் சலவை செய்கின்றன. அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளில் இருந்து மக்கள் திசைதிருப்பப் படுகிறார்கள். ஹிட்லர் மற்றும் முசோலினியின் காலத்திலேயே நாம் பார்த்தது போல, மக்களைத் தூண்டிவிடும் கவர்ச்சிப் பேச்சுகள் (Demagogy) பாசிஸ்டுகளின் தனி அடையாளமாகும். தற்போதைய சகாப்தம் ஒரு ‘உண்மைக்கு அப்பாற்பட்ட யுகம்’ (Post-truth) ஆகும். இதில், பொதுக் கருத்தை உருவாக்குவதில் புறநிலை உண்மைகளும், அனுபவத் தரவுகளும் தங்கள் செல்வாக்கையும் பொருத்தத்தையும் இழக்கின்றன. மக்களின் உணர்ச்சிகள், தனிப்பட்ட நம்பிக்கைகள், அடையாள அரசியல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பொய்க் கதைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. உண்மை புறக்கணிக்கப்பட்டு, தீய போலிப் பேச்சுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

சமூகப் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் தங்கள் பொய்யான சித்தாந்தத்தைப் பரப்ப, பாசிச சக்திகள் இந்த ‘உண்மைக்குப் பிந்தைய யுகத்தை’ச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. 20-ஆம் நூற்றாண்டு  பாசிசத்தின் பண்புகள் தோழர் ஜார்ஜி டிமிட்ரோவ், பாசிசம் என்பது வன்முறை மற்றும் அடக்குமுறை மூலம் ஆளும் வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகாரம் என்று வரையறுத்தார். கம்யூனிஸ்டுகளாகிய நாம் தனிப்பட்ட சர்வாதிகாரிகளை மட்டும் குறை கூற முடியாது. 20-ஆம் நூற்றாண்டில் பாசிசம் உருவாவ தற்குக் காரணமான புறநிலைச் சூழலை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்: 1.கடும் பொருளாதார நெருக்கடி: ஏகாதிபத்தி யங்களுக்கு இடையேயான முரண்பாடுகளும், தேசிய நிதி மூலதனங்களுக்கு இடையேயான முரண்பாடுகளும் உலகப் போர்களாக வெளிப் பட்ட காலத்தில் பாசிசம் எழுச்சி பெற்றது. முதலா ளித்துவத்திற்கு அது ஒரு பெரும் நெருக்கடிக் காலம். 2.தேர்தல் வழி அதிகாரம்: ஹிட்லரும் முசோலினியும் ஆட்சியைக் கைப்பற்றத் தேர்தல்களைப் பயன் படுத்தினர். ஆனால் பாசிச ஆட்சி நிறுவப்பட்ட வுடன், தேர்தல்கள் காணாமல் போயின. 3. ஆதரவளித்த ஏகபோகங்கள்: நிதி மூலதனம் மற்றும் ஏகபோக நிறுவனங்கள் தங்கள் நெருக்க டியைத் தீர்க்கப் பாசிச ஆட்சிகளுக்கு முழு ஆதரவு அளித்தன.

எதிர்ப்பை ஒடுக்கி, பொருளாதாரச் சுமையைத் தொழிலாளர்கள் மீது சுமத்த முழுமை யான சர்வாதிகாரம் அவர்களுக்குத் தேவைப் பட்டது. நவ பாசிசத்தின் (Neo-Fascism)  புதிய அம்சங்கள் தற்போது நாம் காணும் பாசிச அமைப்புகள் 20-ஆம் நூற்றாண்டு பாசிசத்துடன் பல ஒற்றுமை களைக் கொண்டுள்ளன. அதே சமயம், சில அம்சங்களில் வேறுபடுகின்றன. அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தனது 24ஆவது மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தின்படி, தற்போதைய பாசிச சக்திகளை நவ பாசிச சக்திகள் (Neo-Fascist forces) என்று வகைப்படுத்துகிறது. இதன் சில முக்கிய அம்சங்கள்: 1.உலகளாவிய நிகழ்வு: இது குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் உரியதல்ல. 2.நவ தாராளவாதத்தின் முட்டுச்சந்தில் வளர்ச்சி: நவ தாராளவாதக் கொள்கைகள் தாங்களே உரு வாக்கிய நெருக்கடியைத் தீர்க்க முடியாமல், ஒரு முட்டுச்சந்தில் நிற்கும் காலத்தில் நவ பாசிசம் வளர்கிறது. 3. ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடு கள்: கடந்த காலத்தைப் போல, ஏகாதிபத்தி யங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் முழு அளவிலான போருக்கு இட்டுச் செல்லாமல் இருக்கலாம். ஏனெனில் நிதி மூலதனம் ஒரு உல களாவிய தன்மையைப் பெற்றுள்ளதால், தனக்குப் பாதகமான ஏகாதிபத்திய முரண்பாடுகளை மௌ னமாக்க அது முயல்கிறது.

டிரம்ப்பின் வரிக் கொள்கைக்குப் பின்னரும், வளர்ந்த நாடுகள் அமெ ரிக்காவுடன் இணங்கிச் செல்லவே பார்க்கின்றன என்பது இதற்கு ஓர் உதாரணம். 4. சர்வாதிகாரம்: சிக்கன நடவடிக்கைகள், சமூக நலச் செலவுகளில் வெட்டுக்கள் மூலம் முதலாளிகள் பொருளாதாரச் சுமையைத் தொழிலாளர்கள் மீது சுமத்துகின்றனர். இதைச் செயல்படுத்த, போ ராட்டங்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கை கள் மற்றும் மக்களைத் தன் விருப்பப்படி சிறை வைக்கக் கொடூரச் சட்டங்கள் தேவைப்படு கின்றன. இதனால் ஜனநாயக நெறிகள் தூக்கி யெறியப்படுகின்றன. 5.பழங்காலப் புனைவுகள்: மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகள் பழங்காலப் பெருமைகளைப் பற்றிய போலியான எதிர்வினைக் கதைகளை உருவாக்கி, மக்களை அதன்பால் திரும்பத் தூண்டுகின்றன. 6.வெறுப்பு அரசியல் மற்றும் ஒடுக்குமுறை: மதம் அல்லது இனம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது சிறுபான்மையினருக்கு எதிராக வெறி யையும், வெறுப்பையும் உருவாக்குகின்றனர். இவர்கள் மோசமான ஆணாதிக்கவாதிகள். பெண்களின் உரிமைகளையும் வாழ்க்கையையும் கட்டுப்படுத்த முயல்கின்றனர். 7. தேர்தலைச் சிதைத்தல்: நவ பாசிச சக்திகள் தேர்தலை முழுமையாகக் கைவிடுவதில்லை. அவர்கள் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற தேர்தல்களைத் திட்டமிட்ட முறையில் திரித்து, கையாண்டு, சுரண்டு கிறார்கள். இந்தியாவில்  நவ பாசிசத்தின் வடிவம் இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, தனது 11 ஆண்டுகால ஆட்சியில் நவ  பாசிசப் பண்புகளை வெளிப்படுத்தியுள்ளது. 1.கார்ப்பரேட் சார்பு: ஒருபுறம் பெரிய கார்ப்பரேட்டு களுக்குச் சாதகமான கொள்கைகளைப் பின்பற்று கிறார்கள். மறுபுறம், மக்களைப் பிளவுபடுத்த மதவாதத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியக் குடியரசின் தன்மையை இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்பதே இந்த ஆட்சியின் முதன்மை இலக்கு. 2. இந்துத்துவா சித்தாந்தம்: பெரும்பான்மை மத மான இந்து மதத்தின் மேலாதிக்கக் கருத்தைப் பயன்படுத்தி, பெரும்பான்மை மக்களைச் சிறு பான்மையினருக்கு எதிராகத் திரட்டுகிறார்கள்.

இது இந்துத்துவா சித்தாந்தம் என்று அழைக் கப்படுகிறது. இது ஒரு அரசியல் திட்டம் மட்டுமே. இதில் மதவாதம், சாதியப் பாகுபாடு மற்றும் ஆணாதிக்கம் என்ற மூன்று கொடிய அம்சங்கள் கலந்துள்ளன.     சாதியம்: இந்தியாவின் தனித்துவமான பாகு பாடான சாதி அமைப்பு, பிறப்பின் படிநிலை அடிப்படையில் மக்களை அடுக்கிக் கொடுமைப் படுத்துகிறது. தீண்டாமை இதன் மிகக் கொடூர மான வெளிப்பாடு. இதில் ‘கீழ்’ நிலையில் உள்ளவர்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டு, மிகுந்த வறுமையில் உள்ளனர். வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகவும், சாதி மற்றும் பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும் இந்தியாவின் வர்க்கப் போராட்டம் அமைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திட்டம் வலியுறுத்துகிறது. 3. கார்ப்பரேட்-மதவாத ஆட்சி: எனவே, நாங்கள் இந்த அரசை கார்ப்பரேட் ஆதரவு மதவாத ஆட்சி (Pro-Corporate Communal Regime) என்று  வரையறுக்கிறோம். நவ தாராளவாதக் கொள்கைக ளுக்கு எதிரான போராட்டமும், இந்துத்துவ மத வாதத்திற்கு எதிரான போராட்டமும் ஒருங்கி ணைக்கப்பட வேண்டும்.     ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்) தலைமையிலான மோடி அரசு, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணை யம் மற்றும் நீதித்துறையின் ஒரு பகுதி போன்ற அரசியலமைப்பு நிறுவனங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது.

நாடாளு மன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன் படுத்தித் தீய சட்டங்களைக் கொண்டுவரு கிறார்கள். இந்திய மார்க்சிய சிந்தனையாளர் அய்ஜாஸ் அகமது குறிப்பிட்டது போல, “அவர்கள் உள்ளே இருந்தே கைப்பற்றுகிறார்கள். அவர்கள் அமைப்புகளைத் தகர்க்காமல், தங்கள் சித்தாந்தத்தைச் செயல்படுத்தவும், அதிகா ரத்தைப் பராமரிக்கவும் அவற்றைப் பயன் படுத்துகிறார்கள்.” அடையாள அரசியலும்  புரட்சிகரப் பாதையும் அடையாள அரசியல் (Identity Politics) வடிவில் ஒரு சவால் எழுந்துள்ளது. இது வர்க்க அரசியல் மற்றும் மார்க்சியக் கோட்பாட்டிற்கு எதிரானது. அவர்கள் உலகளாவிய பார்வை மற்றும் வர்க்கப் போராட்டக் கருத்துக்களை மறுக்கிறார்கள். சமூ கத்தைப் பல துண்டுகளாகப் பிரித்துப் பார்க்கிறார் கள். இந்தியாவில் இன, சாதி, மத அடிப்படையிலான அடையாள அரசியல் இயக்கங்கள் உள்ளன. இத்த கைய பிளவுபடுத்தும் இயக்கங்களை விமர்சிப்பது மட்டும் போதாது என்று எங்கள் கட்சி கருதுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளை நாம் எடுத்துக்கொண்டு, ஒருபுறம் அவர்களின் உரிமை களுக்காகப் போராடிக் கொண்டே, அதே சமயம் அடையாள அடிப்படையிலான இயக்கங்களின் போதாமையை நாம் அம்பலப்படுத்த வேண்டும். எனவே, களப் போராட்டங்கள் மட்டுமல்ல, தீவிர வலதுசாரி நவ பாசிச சக்திகளுக்கும் ஏகாதிபத்தி யத்திற்கும் எதிரான சித்தாந்தப் போராட்டமும் மிக அவசியம். ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் பாசிச எதிர்ப்புச் சிந்தனைகள் உலக மக்கள் மத்தியில் வளர்க்கப்பட வேண்டும்.

நமது கோட்பாட்டு ரீதியிலான கருத்துக்களையும், போராட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள, ஒரு உலகளாவிய இடதுசாரி அல்லது கம்யூனிஸ்ட் செய்தி இணையதளம் தேவை. நமது தத்துவார்த்த இதழ்களின் வலைத்தளங்கள் இதில் இணைக்கப்பட வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும் அந்தந்த நாட்டின் துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமான பகுப்பாய்வு செய்ய வேண்டியிருந்தாலும், நமக்கு ஒரு பொதுவான இலக்கு உள்ளது. அது, மக்களை முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவிப்பதாகும். சமூகத்தில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர மார்க்சியம் மட்டுமே சரியான சித்தாந்தம் ஆகும். நாம் அனைவரும் இணைந்து, சிறந்த எதிர் காலத்தை நோக்கி அணிவகுப்போம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.