முந்தய பக்கம்

கடலூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆதரவு

9 Apr 2026, 5:30 am
கடலூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆதரவு

கடலூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆதரவு

கடலூர், ஏப். 8- கடலூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் போட்டியிடுகிறார்.

திருப்பாப்புலியூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார்.

அவருக்கு சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்றுவது என்று தீர்மானித்துள்ளனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram